பக்கம்:பேசாத பேச்சு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு பொருள்

பேச்சில் வல்லவர்கள் சில சமயங்களில் இரண்டு பொருள் தோன்றும்படி பேசுவார்கள். தர்ம சங்கடமான நிலையில், இரண்டு கட்சிகளுக்கும் சமாதானமாகப் பேச வேண்டிய சந்தர்ப்பத்தில், இரண்டு வகையினரும் கம் கட்சிக்கு அநுகூலமென்று கினேக்கும்படியாகப் பேசுவது சில சாமர்த்தியசாலிகளின் இயல்பு.

இலக்கியத்தில் இரண்டு பொருள் படும்படியாகப் பேசுவதைச் சிலேடை என்று சொல்வார்கள். சிலேடை பணி என்பது ஒர் அலங்காாத்துக்குப் பெயர். ஒவ்வொரு பாட்டிலும் சிலேடை வரும்படியாக அமைத்து வெண் பாக்களால் பாடிய ஒருவகைப் பிரபந்தத்துக்குச் சிலேடை வெண்பர் என்று பெயர். தெலுங்கில் ஒரே காவியம் ாமாயண்மாகவும், பாாதமாகவும் இரு பொருள் தரும்படியாக அமைந்திருக்கிறது. ராகவ பாண்டவியம் என்னும் அந்த நூலில் ஒவ்வொரு பாடலிலும் ராமாயண சம்பந்தமான பொருள் ஒன்றும் பாரத சம்பந்தமான பொருள் ஒன்றம் ஒருங்கே தோன்றும். -

காளமேகப் புலவர் சிலேடை பாடுவதில் வல்லவர். சமீப காலத்தில் ராமநாதபுரம் சம்ஸ்தானத்தில் புலவராக இருந்த வேம்பத்தார்ப் பிச்சுவையர் என்பவர் சிலேடைப் புலி என்னும் பட்டம் பெற்றவர். ஒரே நாளில் பன்னி ரண்டு சிலேடைகள் பாடிப் பாஸ்கார சேதுபதி யாசரிடம் பரிசு பெற்றவர் அவர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/72&oldid=610227" இலிருந்து மீள்விக்கப்பட்டது