பக்கம்:பேசாத பேச்சு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{36 - பேசாத டேச்சு

நீட்டினன். அது கண்ட சைகை சாஸ்திரி மூன்று விாலை அவசரமாக நீட்டினர். எதிரே இருந்த்வன் தன் கையால் ஓங்கி மேஜைமேல் ஒரு குத்துக் குத்தின்ை.

மறுகணமே உள்ளுர்க் கலைஞர், சபாஷ்!” என்ருர். 'உங்களைப் போல விஷயம் தெரிந்தவரை நான் பார்த்த தில்லை; மிகவும் சந்தோஷம்” என்று சொல்லி உபசா வார்த்தைகள் பேசினர். அவனே ஒன்றும் பேசாமல் கனத்துக்கொண்டு வெளியேறினன்.

சபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அயலூர் மனிதன் எப்படியோ அவரை மகிழச் செய்து பாராட்டு வார்த்தையையும் பெற்ருன் என்பதில் அவர் களுக்கு உண்டான ஆச்சரியம் எல்லே கடந்து சென்றது. தம் ஊர்க் கலைஞரை அணுகினர்கள். சுவாமி, வந்த கலைஞர் எத்தகையவர்?’ என்று கேட்டார்கள்.

'விஷயத்தை நன்முகத் தெரிந்து கொள்கிரு.ர். சுருக்கமாகப் பதில் சொல்லுகிரு.ர். பேசாத பேச்சின் ாகசியத்தை அவர் நன்முகத் தெரிந்துகொண்டிருக்கிருர்’ என்ற பதில் வந்தது.

“தாங்கள் என்ன சொன்னீர்கள்? அவர் என்ன சொன்னர்? தயைசெய்து எங்களுக்கு விளக்கவேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்கள். -

"நான் முதலில் கடவுள் ஒருவரே என்பதை ஒரு விால் நீட்டிக் குறிப்பித்தேன். அவர் அதை ஒப்புக் கொண்டவரைப் போலத் தலை அசைத்து, ஒருவராக இருந் தாலும் சக்தி சிவம் என்று இரண்டாகப் பிரித்துச்சொல்ல லாம் என்பதை இரண்டு விால் காட்டித் தெரிவித்தார். அப்படிப் பிரித்துப் பார்ப்பதாளுல் மும்மூர்த்திகள் என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/75&oldid=610230" இலிருந்து மீள்விக்கப்பட்டது