பக்கம்:பேசாத பேச்சு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨8 பேசாத பேச்சு

(பேதையர் ஆயம் - மகளிர் கூட்டம். மாதர் காதலி. படர் இருள் கால் சீக்கும் பகலவனே-படருகின்ற இருட் டைத் துடைக்கும் சூரியனே. குடதிசையை மேற்குத் திக்கை. குறிப்பு - காவல் புரிந்தது.)

奖 ~. 荣

அவள் யாழில் வல்லவள். மிகவும் அருமையாக யாழிசையும் தீங்குரலும் இழைந்துவரப் பாடுவாள். பலர் கூடியிருக்கும் இடத்தில் இனிமை கொப்புளிக்கப் பாடிக் கொண்டிருந்தாள். அந்தக் கூட்டத்தில் அவளுடைய காதலனும் அமர்ந்திருந்தான். அவன் கண்கள் காதலை வெளிப்படுத்தின. அது கண்ட அவள் உள்ளத்தும் காதல் உணர்ச்சி பொங்கியது. அவனுேடு அளவளாவ வேண்டும் என்று எண்ணினுள், !

கானமுதத்தைப் பொழிந்து கொண்டு வரும்பொழுது ாசிகர்கள், அடுத்தபடி இது பாடுவாள், இது பாடுவாள் : என்று பேசிக்கொள்கிருர்கள். ஒவ்வொரு பண்ணின் ஆரோகண அவரோகண கதிகளிலும் அவள் எல்லோ ருடைய உள்ளத்தையும் கவர்ந்து வந்தாள். காதலனேக் கண்டவுடன் அவள் குறிஞ்சிப் பண்ணை எடுத்துப் பாட ஆரம்பித்தாள். :இதென்ன, இதைக் திடீரென்று எடுத் துப் பாடுகிருளே !’ என்று அருகில் இருந்தவர்கள் யோசித்தார்கள். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை." ஆலுைம் பண்ணும் அதில் அமைந்த பாட்டும் அவர்கள் உள்ளத்தைக் குழைவிக்காமல் போகவில்லை, . . .

அந்த மங்கைநல்லாள் குறிஞ்சியைத் தொடங்கும் பொழுது தன் கண் பார்வையைக் காதலன்மேல் விசினுள்; $ அதை முடிக்கும்போதும் அப்படியே செய்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/87&oldid=610242" இலிருந்து மீள்விக்கப்பட்டது