பக்கம்:பேசாத பேச்சு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபத்தின் கோலம்

நம்முடன் பழகும் மனிதர்களுள் ஒருவன் ஊமை. அவன் தன்னுடைய கருத்தை நம்மைப்போல வெளியிட இயலாத வாயில்லாப் பிராணி. அவனுக்கு நம்முடைய பாஷை விளங்காது. நமக்கு விளங்கும் பாஷையில் அவனுல் பேசவும் முடியாது. இந்த நிலையில் ஊமையுலகம் முழுவதும் பேசாத பேச்சில்ைதான் ஜீவித்திருக்கிறது. -

நமக்குக் தெரிந்த ஊமைக்கு இன்ன வேண்டும் என்பதை அவனுடைய சைகைகளைக் கொண்டு நாம் உணர்ந்து கொள்கிருேம். நாம் நம் கருத்துக்களைப் பேச் சின் மூலமாக வெளிப்படுத்த முயல்கிருேம். அதே மாதிரி அவன் தன் கருத்தைச் சைகை முலம் வெளிப்படுத்த முயல்கிருன். கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று சங்கற்பித்துக்கொண்டு அதற்குரிய முயற்சியை மேற் கொள்வதில் இருவரும் ஒரே அளவில்தான் நிற்கிருேம்.

கம்முடைய சங்கற்பம் இல்லாமலே நம் உள்ளத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஊமைக் கும் அத்தகைய சந்தர்ப்பங்கள் உண்டு. வழக்கமாக நம் பேச்சையும் அவன் சைகைகளையும் துணையாகக் கொண்டு கருத்தை வெளிப்படுத்துவது போன்றதல்ல இது. உள்ளத் திலே பொங்கியெழும் உணர்ச்சியை உடம்பின் உறுப்புக் கள் தாமே வெளிப்படுத்திவிடும். வார்த்தை மூலமாக அந்த உணர்ச்சி வெளிப்படுவதற்கு முன்பே, உடம்பில் ஏற்படும் சிலவகை மாறுபாடுகளால் அது வெளியாகும். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சி வாய்மூலம் வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/89&oldid=610244" இலிருந்து மீள்விக்கப்பட்டது