பக்கம்:பேசாத பேச்சு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபத்தின் கோலம் 81

பேச்சாக இன்றி, உடம்பின் வழியே தோற்றும் பேசாத் பேச்சாக மலர்வதைக் கவிஞர்களும் கலைஞர்களும் ஆராய்ந்து பார்த்திருக்கிருர்கள். அந்தக் குறிப்புக்கு மெய்ப் பாடு என்று தமிழர் பெயர் வைத்தனர். மனத்திலே எழும் உணர்ச்சிகளின் விளைவாக உடம்பிலே உண்டாகும் தோற்றம் என்பது அத்தொடருக்குப் பொருள். மெய்உடம்பு. பாடு - படுதல்; உண்டாதல். இதனைச் சத்துவ மென்றும், விறல் என்றும், பாவம் என்றும் வழங்குவ துண்டு. மெய்ப்பாடு என்பதற்கு, உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படு வதோர் ஆற்ருன் வெளிப்படுதல்” என்று. பழைய உ ை காார் கூறுவர். வேம்பு கின்றவனுக்கு அதன் கசப்பு, தலை

நடுக்கம் முதலியவற்றை உண்டாக்குகின்றது. அந்தத் தலை - நடுக்கம் முதலியவற்றைச் சத்துவம் என்று கூறுவர்.

முன்னே சொன்ன ஊமைக்குக் கோபம் வந்து விட்டால் அது நமக்குத் தெரிகிறது. அவன் கம்மைப் போல் கோபம் மிக்க வார்க்கைகளைச் சொல்லத் தெரி யாதவன். ஆனலும் அவன் கண் சிவக்கிறது; உடம்பு படபடக்கிறது; பல்லைக் கடித்துக்கொள்கிருன். இந்தக் குறிப்புகளைக் கொண்டு அவனுக்குக் கோபம் உண்டாகி யிருக்கிறதென்று தெரிந்துகொள்கிருேம் பேசும் இயல் புடைய நமக்கும் இந்தக் குறிப்புகள் உடம்பில் நிகழும். கோபம் எப்படி ஊமைக்கும் நமக்கும் பொதுவோ, அப்படியே கோபத்தின் விளைவாகிய சத்துவங்களும் இரு வகையினருக்கும் பொது, ஊமை இந்தச் சத்துவங்க ளோடும், அர்த்தம் இல்லாத சத்தங்களோடும் நின்று விடுகிருன். நாமோ அவற்றிற்குமேல், நமக்குத் தெரிந்த கோபச் சொற்களைப் பிரயோகம் செய்கிருேம். ஆகவே,

பே. 6 . . . . . . . . . . .."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/90&oldid=610245" இலிருந்து மீள்விக்கப்பட்டது