பக்கம்:பேசாத பேச்சு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பேச்ாத பேச்சு

கோபம் என்ற உணர்ச்சி எழும்போது முதலில் உள்ளம் தொழிற்படுகிறது; அது மெய்யில் சத்துவமாக வெளி யாகிறது ; அப்பால் உரையாக விளகிறது. இந்த மூன்றில் முன் இரண்டும் இயற்கையாக விளைவன ; உறை செயற்கையாக வருவது. -

நாடகங்களில் நடிப்பவன், கனக்குக் கோபம் வந்த தாகக் காண்பவர்கள் உள்ளத்தில் ஒரு தோற்றத்தை எழுப்புவதற்கு உதவுபவை சத்துவங்களும் உரையும் ஆகும். பேசுகின்ற பேச்சைக் காட்டிலும், பேசாத பேச் சாகிய சத்துவத்தையே சிறப்பாகக் கொள்வார்கள். கோபம் உண்டானதுபோல் ஒருவன் நடிக்க, அதனைக் காண்போர் உள்ளத்தில், "இவன் கோபம் கொண்டவன்' என்ற உணர்ச்சியும், அது நாடகக் கோபம் என்ற நினைப்பும் எழும்போது ஒருவகை இன்பம் உண்டாகிறது. அந்த இன்பத்தை ரஸ்மென்றும் சுவையென்றும் சொல்வார்கள். மனிதனுடைய உணர்ச்சிகள் பல படியாக விரிங் திருந்தாலும் அவற்றை ஒன்பதுக்குள் அடக்கி, அந்த ஒன்பதையும் தலைமையாக்கி, மற்றவைகளே அவற்றை வளப்படுத்த வரும் இனமாக்கி வகுத்திருக்கின்றனர், சுவை தேர்ந்த புலவர்கள். இந்த ஒன்பது வகை உணர்ச்சிகளேயும் சத்துவம் முதலியவற்ருல் ஒருவன் புலப்படுத்த, அதனேக் காண்பவர் இன்புறுங்கால் பிறக்கும் ாலங்களும் ஒன்பதாகும். வீாம், பயம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, நடுவுகில், உருத்திாம் எனச் சுவை ஒன்பதென்று வகுத்தார்கள்.

உலகத்தில் நிகழும் உண்மை நிகழ்ச்சியைக் கானும் போது உண்டாகும் உணர்ச்சி ாஸ்மாகாது. அதுவும் ஒர் உணர்ச்சிதான். போலி நிகழ்ச்சியிலே பிறக்கும். இன்பங்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/91&oldid=610246" இலிருந்து மீள்விக்கப்பட்டது