பக்கம்:பேசாத பேச்சு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - பேசாத பேச்சு

தேர்ந்து உணர்ந்து நாடகக் கலைஞரும் கவிஞரும் எடுத்து ஆள்கின்றனர். உண்மையாகவே கோபம் உண்டான ஒருவன்பால் தோற்றிய உடம்பு வேறுபாடுகளைக் கவனித்து, கண்ணுக்குப் புலப்படாத கோபத்தைக் காட்டும் அடையாளங்களாகிய அவற்றைப் பொய்யாக நடிக்கச் செய்து, கோபத்தால் விளவன அவை என்று மெய்யுலகில் கண்டுணர்ந்த சபையினருக்குக் கோபத்தின் ஞாபகத்தை ஊட்டச் செய்வதே நாடகக் கலைத்திறம். எனவே, பேசாத பேச்சாகிய சத்துவங்கள் இயற்கையாக நிகழ்வன, நடிப்போர்கள் ஏறட்டுக் கொள்வன.

காவியங்களில் கதாபாத்திரங்களின் கருத்தை வெளிப் படுத்த அவர்களின் செயல்களும் உரைகளும் பயன்படு கின்றன. அவர்களுடைய உணர்ச்சிகள் மெய்ப்பாடுகளாக வெளிப்படுவதையும் கவிஞர் வருணிப்பார்கள். அவற்றைச் சிறிது பார்ப்போம்.

籌 染 - ,举 கோபம் கொண்டவன் பொதுவாக என்ன செய்வான் ? தண்டியலங்காாக்காார் ஒரு கோபியைக் காட்டுகிருர் : அவன் கையைப் பிசைகிருன் , வாயை மடித்துக் கடிக்கிருன்; கண்கள் சிவக்கின்றன; பெருமூச்சு விடுகிருன் ; உடம்பு படபடக்கிறது கடைசியில்

வேர்த்துப்போகிறது.

கையிசையா வாய்மடியாக் ສສ, ຄລar வெய்துயிரா மெய்குல்யா வேரா வெகுண்டெழுந்தான். (குலேயா - கடுங்கி, வேரா - வேர்த்து.) .

வேருெரு நாடக நூல் வெகுண்டோனுக்குரிய இலக்

- கணத்தைச் சொல்கிறது. அங்கே கோபி, வாயை மடிக்

கிமுன், பெருமூச்சு விடுவதால் மார்பு அகல்கிறது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/93&oldid=610248" இலிருந்து மீள்விக்கப்பட்டது