பக்கம்:பேசாத பேச்சு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபத்தின் கோலம் 85

புருவம் துடிக்கிறது; கையை முன்னே நீட்டி விாலால் சுட்டிச் சுட்டிக் காட்டுகிருன்; ஆத்திரத்தோடு கையைத் தட்டுகிருன். -

வெகுண்டோன் அபிநயம் விளம்புங் கால் மடித்த வாயும் மலர்ந்த மார்பும் துடித்த புருவமும் சுட்டிய விரலும் கன்றின உள்ளமொடு கைபுடைத் திடுதலும் அன்ன நோக்கமோ டாய்ந்தனர் கொளலே. (கன்றின - ஆத்திரங்கொண்ட, கொளல்-கொள்க.) இந்த இரண்டும் இலக்கணக்காரர்கள் பொதுவாகக் காட்டும் உதாரணங்கள். காவியங்களில் கோபம் கொண்டு நிற்கும் பல பாத்திாங்களே நாம் பார்க்கலாம். ஒவ்வொரு பாத்திரத்தின் கோபத்திலும் சில விசேஷ அம்சம் இருக்கும். ... • * ... ...

கோபம் என்பது எல்லோருக்கும் பொதுவான உணர்ச்சிதான் என்ருலும், அதனை வெளிப்படுத்தும் போது அவரவர்களுடைய மனப் பக்குவமும் ஆற்றலும் வெவ்வேறு வகையிலே அந்தக் கோபம் கோலம் கொள் ளும்படி செய்கின்றன. பலர் கோபம் கொள்ளும்போது உடம்பு பதறுகிருர்கள்; வேறு சிலருக்குப் பதறுவதில்லை. கண் சிவக்காமலே வரும் கோபமும் உண்டு. சில பேர் கோபம் கொள்கையில் ஒருவகைச் சிரிப்பு அவர்கள்பால் தோன்றுகிறது. சில பலஹீனர்கள் கோபத்தால் அழுது விடுகிருர்கள்! - -

o இவ்வாறே காவிய பாத்திiங்களில்ே கோபம் பல வகைப்படுகிறது. வேற்றுமைகள் நுண்ணியன ஆலுைம் அந்த நுண்மையில்ைதான் பாத்திரங்களின் குண சிக்கிங்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/94&oldid=610249" இலிருந்து மீள்விக்கப்பட்டது