பக்கம்:பேசாத பேச்சு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபத்தின் கோலம் 37

சொல்கிருன் என்று எண்ணவே, அவருக்குக் கோபம் வத்துவிட்டது.

விசுவாமித்தி முனிவர் யார் தெரியுமா? உலகத் தையே நான் சிருஷ்டிப்பேன் என்று துணிந்த மகா தபஸ்வி. அவர் கோபம் கொள்வதானுல் அது அவர் உடம்பளவிலேயர் வெளிப்படும்? வெகு வேகமாக மழை யும் இடியும் வரும்போது அதற்கு முன்பே பல் காவத து ரத்துக்குக் காற்றும் குழப்பமும் சூசகமாகத் தோன் றிச் சுழற்றுகின்றன அல்லவா? அப்படி மண் படைத்த முனிவர் கோபங்கொள்ளப் போகிருசென்பதைத் தேவர் கள் இமைப்பொழுதில் உணர்த்துவிட்டார்கள். ஊழிக் காலம் வந்துவிட்டகோ என்று ஐயுற்ருர்கள். அவரு டைய உணர்ச்சி உலகத்தையே ஆக்கும்; அழிக்கும். ஆகையால் இந்தக் கோபம் உலகத்தையே அழித்து, படைத்தவனே அழிக்கவும் ஆற்றல் உடையவன் என்பதை நிரூபித்து விடுமே என்று தேவர்கள் அஞ்சினர். சூரியன் மறைந்தனன். அங்கங்கே கின்ற கிரகங்கள் சுழலத் தொடங்கின. இவ்வளவும் முனிவர் உணர்ச்சி புறப்படுவதற்குமுன் அதற்கு இடம் செய்கின்ற முன்னேற் பாடுகள்; விசுவாமித்திர முனிவர் கோப வேஷம் புனேந்து o ஆட வகுக்கும் நிலைக்களம். முனிவருடைய பெருமைக்கு ஏற்றபடி விஸ்தாாமான நிலைக்களமாக இருக்கிறது. அது. - கோப விசுவாமித்கிார் இதோ வந்து விட்டார். அவருடைய கொழுவிய புருவங்கள் மேலே ஏறின, . நெற்றி முழுவதும் சென்று நின்றன. அந்தக் கோபத் கிலே கம்.தலைமையும் பிற பொருள்களிடத்திலே தோற். றிய அலகூபமும் சேர்ந்து நகையை உண்டாக்கின. கண் கள் சிவந்தன. கிசைகளெல்லாம் இருண்டுவிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/96&oldid=610251" இலிருந்து மீள்விக்கப்பட்டது