பக்கம்:பேசாத பேச்சு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபத்தின் கோலம் 89 |

கோபத்தில் துர்வாச முனிவர் விசுவாமித்தி முனிவ ரிலும் உயர்ந்தவர். காரணம்: தவத்தில் குலையாத கில்ே ப்டைத்தவர் அவர். - -

HI சமயம் துர்வாச முனிவருக்கு ஒரு வித்தியாதா மங்கை மகாலசஷ்மியினிடம் தான் பெற்ற பிரசாதமாகிய மாலையை அளித்தாள். அதைப் பெற்ற முனிவர் மிகவும் மகிழ்ச்சியோடு அதனை ஏந்தி வருகையில், எதிரே இந்திான் ஐராவதத்தின்மேல் ஊர்ந்து வந்துகொண்டிருந்தான். அவன் வருகிறபோது அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதுகண்டு மிகவும் வியப்பும், உவகையும் அடைந்த முனிவர், தம் கையில் இருந்த மாலையை அவனிடம் நீட்டினர். இந்திான் அலட்சிய மாகத் தன் கையிலுள்ள அங்குசத்தால் வாங்கி ஐாவதத் தின் பிடரியின்மேல் வைத்தான். அந்த யானே உடனே அதைத் தன் துதிக்கையால் எடுத்துக் காலில் வைத்துத் தேய்த்தது. கண்டார் கோப உருவங்கொண்ட முனிவர். அப்புறம் சொல்லவேண்டுமா? • , , - .

முன்னே தேவர்கள் விசுவாமித்கி முனிவர் கோபத்தை எதிர்நோக்கி, ஊழிக்காலம் வத்துவிட்டதோ, என்னவோ!' என்று சந்தேகப்பட்டார்கள். இங்கே அந்தச் சந்தேகத்துக்கே இடம் இல்லை. இந்திரனைச் சூழ நின்று எல்லாவற்றையும் கண்ணுலே பார்த்துக் கொண்டு நிற்பவர்களாயிற்றே. இந்திான் செய்தது சாமான்ய அபசாமா? கோபங்கொள்ளும் முனிவர்தாம் வெறும் சங்கியாசியா? . . . . . .

முனிவர் கண்கள் இந்திரனும் யானையும் செய்த அட களங்களைக் கண்டன. அவை சிவந்தன என்ற சொல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/98&oldid=610253" இலிருந்து மீள்விக்கப்பட்டது