பக்கம்:பேசாத பேச்சு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 : பேசாத பேச்சு

வில்லை கவிஞர். விசுவாமித்திாருக்குக் கோபம் வந்த போது கண்கள் சிவந்தன. இங்கே துர்வாசர் கண்கள் கனலேக் கக்கின. அந்தக் கனலால் அண்ட கூடங்கள் யாவும் நிச்சயமாகச் சாம்பலாகிவிடும் என்று அஞ்சி நடுங்கித் தேவர்கள் அங்கிருந்த ஒடிஞர்கள். சூரிய சந்திார் எங்கேயோ போய் ஒளித்துக்கொண்டனர். திசைகளெல்லாம் இருண்டன. உலகம் யாவும் சுழன்றன. இவை நிலைக்களம். -

விசுவாமித்திரர் கோபக்கோலத்துக்கு இதனினும் சிறிய நிலைக்களத்தைத்தான் கம்பர் அமைத்தார். இந்தக் கோபம் இன்னும் பெருகிய தவ வலிமையிலே பிறப்பது. - ஆகவே இதன் உருவமும் இதற்கு அமைக்கும் கிலைக் களமும் பெரியனவாகத்தானே இருக்கவேண்டும்?

கண்ட மாமுனி விழிவழி

ஒழுகுவெங் கனலால் அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும்என்று அழியா விண்டு நீங்கினர் விண்ணவர்

இருசுடர் மீண்ட எண்டி சாமுகம் இருண்டது

சுழன்றதெவ் வுலகும். புறத்தே நிகழும் நிகழ்ச்சிகள் இவ்வாருக, முனிவர் மெய்யிலே தோன்றிய சத்துவங்களையும் காண்போம்.

தவ முனிவாகிய - அவருடைய கோபக் கனல் உயிர் களேச் சுட்டது. மற்றக் கனல்கள் உடம்பைச் சுடும்; மாத் தைச் சுடும்; மட்டையைச் சுடும்; இந்தக் கனல் உயிர் தொறும் புகுந்து சுட்டது: அடையாளம் என்ன? உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/99&oldid=610254" இலிருந்து மீள்விக்கப்பட்டது