பக்கம்:பேசாத பேச்சு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபத்தின் கோலம் 9I

தொறும் புகை எழுந்தது. நகை எழுந்தது. முனிவர் முகத்தில். விசுவாமித்திாருக்கும் நகை எழுந்தாலும் அதைக் கம்பர் வெறுமனே சொல்லி நிறுத்தினர். இங்கே துர்வாசர் கைத்தார்; முப்புரமும் பொடிசெய்தபோது சிவபிரானிடம் எழுந்த சிரிப்பைப்போல இருந்தது அவர் நகை. அவர் தலைமை சாக்ஷாத் திரிபுராந்தகனுடைய தலைமைக்குச் சமானம். விசுவாமித்திாருடைய நகை வசிஷ்டரையும் தசாதனையுந்தான் நடுங்கச் செய்தது. இங்கே இந்திரபோக வாழ்வு அத்தனையுமல்லவா அழிந்தொழியப்போகிறது? அகங்காரமே வடிவமான இந்திானது மமகாாப் பொருளாகிய வளங்களேயெல்லாம் அந்த நகை சுட்டொழிக்கப் போகிறதல்லவா? அவ்வளவு ஆற்றலையும் தெளிவாக்க, கிரிபுராந்தகனப்போல அவர் முகத்தில் நகை தோன்றியது என்ற உபமானம் இங்கே பயன்படுகிறது. -

நகை எழுந்தது. புருவங்கள் நெற்றி மேலே ஏறின. விழிகளில் கோபத்தின் கொழுந்து எழுந்தது. இடியும் திகைக்கும்படி பேச ஆரம்பித்தார்.

- புகையெ ழுந்தன உயிர்தொறும்;

எயில்பொடித் தவனின் நகையெ ழுந்தன; நிவந்தன

புருவம்நன் னுதலில் சிகையெழுஞ்சுடர் விழியினன் அசனியுந் திகைப்ப மிகைய்ெ ழுந்திடு சதமக

கேளென வெகுண்டான். メ [எயில் பொடித்தவனின் திரிபுரங்களை எரித்தவனைப் போல. சிகை-கொழுந்து. அச்னி இடி மிகையெழுந்திடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/100&oldid=610255" இலிருந்து மீள்விக்கப்பட்டது