கலைஞர் மு. கருணாநிதி 9 டிருப்பார். இவ்வாறு ஒரு இடத்தில் மட்டுமல்ல; பல இடங்களில்! அங்கெல்லாம் ஒரு மேசை மீது, அல்லது ஒரு முக்காலி மீது, அல்லது ஏதாவது ஒரு பீடத்தின் மீது, யாராவது ஒருவர் நின்று உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பார். நமது ஊர்த் தெருக்களில் வித்தை காட்டுகிறவனைச் சுற்றிக் கூட்டம் கூடியிருப்பது போல அங்கும் கூடியிருக்கும். அந்தச் சொற்பொழிவாளர்கள் இடத்தைத் தங்களின் பயிற்சிக்கூடமாகவே அந்த ஆக்கிக் கொண்டு பேசுகின்றனர். அவர்கள் அங்கே எதைப் பேசி னாலும் தடையில்லை. ஆங்கிலேய அரச பரம்பரை யினரைப் பற்றிக் கூட ஆசை தீரத் தாக்கிப் பேசுவார்கள். பல்வேறு நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றிக் கடுமையாக அலசுவார்கள். பார்க்கிற்கு வருகின்ற மக்களும் ஒவ்வொருவர் பேச் சாகக் கேட்டுக்கொண்டே, அன்றைய பொழுதைக் கழித்து, விட்டு வீடு திரும்புவர். ய அந்தப் பார்க்கிலே பேசி இந்திய நாட்டு உரிமைகளை அந்த நாட்டு மக்களுக்கு விளக்கிய ஒரு தலைசிறந்த. இந்தியப் பேச்சாளருடைய பெயர் உங்களுக்குத் தெரியுமா? ஐ.நா.சபையில் மிக நீண்ட நேரம் பேசி, பெரிய தொரு "ரிக்கார்டையே" ஏற்படுத்திய வி. கே. கிருஷ்ண மேனன்தான் அந்தப் பூங்காவிலே ஆரம்ப காலத்திலே பேசியவர்! பார்க்"கில் அவர் இலண்டன் நகரத்து "ஹைட் நூற்றுக்கணக்கானவரை வைத்துக்கொண்டு பேசியபோது அவர் ஒரு காலத்திலே, ஐ.நா. அவையிலே புகழ்மிக்க சொற்பொழிவாளராக விளங்குவார் என்று யாராவது நினைத்திருப்பார்களா?
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/11
Appearance