உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பேசும் கலை வளர்ப்போம் எதற்கும் முயற்சி வேண்டும். முயற்சி திருவினை யாக்கும். முதலில் நான் எப்படிப் பேசக் கற்றுக் கொண் டேன்? அதைச் சொல்ல வேண்டாமா? மேடையில் பேசி யதைத்தான் குறிப்பிடுகிறேன்; வீட்டில் பேசக் கற்றுக் கொண்டதை அல்ல! 2 அப்போது வயது எனக்கு பதினைந்து! என்னுடன் படித்த மாணவ நண்பர்கள் சிலரையும் நான் வசித்த தெருவில் உள்ள இளந்தோழர்கள் சிலரையும் சேர்த்துக் கொண்டு "சிறுவர் சீர்திருத்த சங்கம்" என்ற ஒரு அமைப்பை ஒரு ஓலைக் குடிசையில் தொடங்கினேன். அதில் காலணா கொடுத்தவர்களே உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள். வாரந்தோறும் அவர்கள் சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒரு பைசா சந்தாக் கட்டணம் செலுத்திவிட வேண்டும். "நெஞ்சுக்கு நீதி" என்ற எனது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளின் முதல் பாகத்தில் குறிப்பிட்டிருப்பது போல, ஓலைக் குடிசையில் இருந்த அந்தச் சங்கம், விரைவில்- பழுதுபட்ட ஒரு ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு மாற்றப் பட்டது. அதற்கு முன்பே அந்த ஓலைக் குடிசையில் ஏழெட்டு டு சிறுவர்களை உட்கார வைத்துக்கொண்டு சங்கத்தின் தலைவனான நான் பேசுவேன். சிறுவர்கள் சுகாதாரத்துடனும் ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். பீடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகக் கூடாது. தீமை தரக்கூடிய வார்த்தைகளை யாரும் பேசக் கூடாது. இதுபோன்ற அறிவுரைகளை எடுத்துச் சொல்வேன். ய