உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 11 அந்த ஓலைக் குடிசைக்குப் பக்கத்து வீடுதான் மறைந்த இசைமணி டி.வி. நமசிவாயத்தின் வீடு! நமசிவாயம் என் இளமைக் கால நண்பர். அவரது மாமன்கள்தான் டி. என். இராமன்-டி. என். லட்சப்பா என்ற சுயமரியாதை இயக்கத்தின் சுடர்களாக அப்போது அந்தப் பகுதியிலே விளங்கியவர்கள். அறிஞர் அண்ணா அவர்களைக் கொண்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பணமுடிப்பு வழங்கிய விழாவுக்கு முயற்சி எடுத்துக் கொண்ட டி.எம். பார்த்தசாரதி, ஜலகண்டபுரம் கண்ணன் போன்றவர்களுடன் முன்னணியில் நின்று பாரதிதாசன் மலர் ஒன்றையும் வெளியிட்டவர்தான் டி. இராமன்! என். அத்தகைய அரசியல் சமுதாய ஈடுபாடு கொண்டவர் களை நண்பர் நமசிவாயம் இல்லத்தில் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. அதன் காரணமாகப் பல புத்தகங் களையும் பத்திரிகைகளையும் காண முடிந்தது. பல அரசியல் தலைவர்களின் கருத்துக்களைப் படித்து உணர்ந்து கொள்ள முடிந்தது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இது நமது கிராமங்களில் இன்னமும் ஒலிக்கிற பழமொழி. அதைப்போல பேசுவதற்கும் ஏதாவது விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தால்தானே பத்து பேர் கூட்டமென் றாலும் பேச வரும். பல தலைவர்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் பழக்கம் நாளிதழ்கள்-வார-மாத இதழ்களை ஆர்வத்துடன் காத்திருந்து வாங்கிப் படிக்கும் பழக்கம் இவைகள் என் உள்ளம் என்ற சட்டியை நிரப்பி வைத் திருந்தன. அந்த வயதில் புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் சமுதாயப் பிரச்சினைகளைப் புரிந்து வைத்துக் கொண்டிருந்தேன். அதனால் அந்த ஓலைக் குடிசைக் கூட்டங்களில் என்னால் நடுக்கமின்றிப் பேச முடிந்தது. அந்தத் தயாரிப்பு, நான் பயின்ற உயர்நிலைப்பள்ளியில்