14 பேசும் கலை வளர்ப்போம் நடைபெற்ற மேடைப் பேச்சுப் போட்டிக்கு மிகவும் துணை யாக இருந்தது. சபைக் கூச்சம்-அதி அவை நடுக்கம்- அதாவது லிருந்து ஒருவன் மீண்டுவிட்டால், அவன் நல்ல பேச்சாள னாக வாய்ப்புப் பெற்று விட்டான் என்று கூறிவிடலாம். இன்றைக்கு மேடை அதிர முழங்குகிற பல பேச்சாளர்கள் தங்களது முதல் மேடைப் பேச்சின்போது உடலிலுள்ள நாடி நரம்புகள் எல்லாம் அதிக வியர்வை வழிந்தோட - நாக் குழற மேடையில் நின்றிருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். . க அந்தச் சங்கடம் எனக்கு ஏற்படாமல் போனதற்கு இளம்வயது முதலே, சிறுசிறு கூட்டங்களில் நானே பேசிப் பழகிக்கொண்டதுதான். அப்படியிருந்தும்கூட பெரிய கூட்டங்களைக் காணும்போது ஆரம்பகாலத்தில் சிறிது நேரம் எனக்கு நடுக்கம் ஏற்பட்டதும் உண்டு. உயர்நிலைப் பள்ளியில், 'நட்பு' என்ற தலைப்பில் எனது முதல் மேடைப் பேச்சை நிகழ்த்தினேன். எனது தமிழாசிரியர்களில் ஒருவரும், இன்று மகா வித்துவானாக விளங்கக் கூடியவருமான, தண்டபாணி தேசிகர் அவர்கள்தான் எனது பேச்சுக்குத் தேவையான பல குறிப்புகளை எனக்கு வழங்கினார். அந்தக் குறிப்பு களைப் பெற, அவரது வீடு தேடி நாலைந்து முறை நடந் திருக்கிறேன். திருவாரூர் குமர கோவில் தெருவில் அப்போது அவர் குடியிருந்தார். அவர் தந்துதவிய குறிப்பு களை அப்படியே எழுதி, பல முறை மனப்பாடம் செய்து கொண்டேன். 'நட்பு' என்ற தலைப்பில் பேசிய எனக்குத் தான் மிகப் பெரும் பாராட்டு கிடைத்தது. நான் அந்தப் பாராட்டைப் பெறுவதற்கு இரண்டு மூன்று நாட்கள், நான் எழுதிய குறிப்புக் கோவையை உறக்கமின்றி மனப்பாடம் செய்திருக்கிறேன். வீட்டில்
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/14
Appearance