உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பேசும் கலை வளர்ப்போம் அந்தச் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்து வதன் மூலமே எழுத்துக் கலையையும், பேச்சுக்கலையை யும் திறமையாகக் கையாள முடியும். வைத்துக் கொண்டு சொற்களைத் தேர்ந்தெடுப்பது என்றால் அகராதியை சொற்களை மனப்பாடம் செய்து அவற்றை நமது பேச்சில் எப்படியெப்படி பதியவைப்பது என்று முயற்சி மேற்கொள்வது அல்ல! நிறைய நூல்களைப் படிப்பதாலும், நாளேடுகள், கிழமை ஏடுகள், திங்கள் ஏடுகளைப் படிப்பதாலும் புதிய புதிய சொற்கள் நமக்குப் பழகிப் போய்விடுகின்றன. நாம் பேசும்போது அவை, தானாகவே வலிய வந்து விழ வேண்டும். வாக்கியத்துக்கு வாக்கியம் பொருத்தமான சொற்களை மேடையில் ஏறி நின்றுகொண்டு தேடக் கூடாது. ஓரளவு நாமே ஒரு அகராதியாக விளங்கிட வேண்டும். பேரகராதியாக விளங்க முடியாவிட்டாலும் நிறைய சொற்களைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும். ய சங்க இலக்கிய நூல் ஒன்றுக்கு உரையெழுதக்கூடிய அளவுக்குச் சொற்களைப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பேச்சாளருக்குத் தேவையில்லை அதற்காக அத்தனை சொற்களையும் நெரிந்து வைத்துக் கொள்ள வேண்டரமென்று நான் கூறவும் மாட்டேன். அவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டால் அவர்கள் மேலும் ஆற்றல் மிக்க பேச்சாளர்களாக ஒளிவிடமுடியும். அது மட்டுமின்றி, வளர்ந்துவரும் அறிவுலகத்தில் நாள் தோறும் புதிய புதிய சொற்கள் பிறந்துகொண்டேயிருக் கின்றன. அவற்றையெல்லாம் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியது ஒரு பேச்சாளரின் கடமையாகும். முன்பெல்லாம் அவர்கள் எவ்வளவு பெரிய பேச்சாளர் களாக இருந்தாலும். தலைவர்களாக இருந்தாலும் மேடையில் ஏறியதும் சில நிமிடங்கள் பீடிகை போட்டு விட்டுத்தான் பேசுவார்கள். க