உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 17 “அடியேன் பேசப்போகும் விஷயத்தில் குற்றம் குறை கள் இருக்கலாம். அப்படி இருக்குமேயானால் சபையோர் களாகிய நீங்கள், எப்படி பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் அன்னப்பட்சியானது பாலை மட்டும் பருகிவிட்டு, தண்ணீரை விட்டு விடுகிறதோ அதைப்போல எனது பேச்சில் உள்ள நிறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு குறைகளை விட்டுவிடுமாறு கேட்டுக் கொள் கிறேன். இதுபோலத்தான் பழங்காலத்துப் பேச்சுக்கள் அமை யும். நான் தொடக்கத்தில் மேடையில் பேசும்போது இதே பீடிகையை வேறொரு உவமை கூறிப் பேசியிருக்கிறேன். "அவையோர்களே!சர்க்கரையையும் மணலையும்கலந்து வைத்தகல்,எப்படி எறும்பானது மணலை விடுத்துச் சர்க்க ரையை மட்டும் தின்றிடுமோ அதைப் போசிவும்--இரும் புத்தூளையும் மரத்தூளையும் கலந்து வைத்தால்,எப்படிக் காந்தமானது இரும்புத்தூளை மட்டும் இழுத்துக்கொள் ளுமோ அதைப் போலவும்-என் பேச்சில் குறைகளைத் தள்ளிவிட்டு, நிறைகளை ஏற்றிடுமாறு கேட்டுக்கொள் கிறேன்.” இப்படி அன்னத்தையும் பாலையும் மாற்றி ஏதோ புதுமை செய்துவிட்டதாக நான் எண்ணிக்கொ காண்டிருந்த காலம் அது! இப்போதும்கூட இளைஞர்களாக இருக்கும் பேச்சா ளர்கள் தாங்கள் பேசுவதற்கு மேடையில் ஏறியதும் தலை வருக்கும் அவையோருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு, "அறிவியலும் அனுபவத்திலும் முதிர்ச்சி அடையாத நான் பேசுவதில் குற்றம் குறைகள் இருந்தால் மன்னித்துவிட வேண்டுகிறேன்” என்று பேச்சைத் தொடங்கினால், அந்த இளைஞரிடம் அவையோருக்கு ஒரு அன்பும் பாசமூம் நிச்சயம் ஏற்படும். 6u-2