கலைஞர் மு.கருணாநிதி 21 ஆரம்ப காலத்தில் திட்டமிட்டுச் செயல்படுத்தினாலும்கூட, போகப் போக அந்தப் பழக்கம் தானாகவே ஏற்பட்டு விடும். ஒரு ஆரம்பப் பேச்சாளன் தோல்வி அடைகிற இடம் அவன் நீண்ட நேரம் பேசவேண்டுமென்று எண்ணுகிற மேடைதான்! "அடேடே! இன்னும் கொஞ்சம் பேசி யிருக்கக்கூடாதா?" என்று அவையோர் அல்லது பொது மக்கள் நினைக்கிற அளவுக்கு ஆரம்பப் பேச்சாளன் நடந்து கொள்ளவேண்டும். ஐந்து நிமிடம் அழகாகப் பேசத் தெரிந்தவுடனேயே, ஐம்பதாயிரம் பேர் கூடியிருக்கிற மாநாட்டில் பேச வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. அத்தகைய மாநாடுகளில் தலைவர்களும், அந்தக் கட்சிகளின் முன்னணியினரும் என்ன பேசுகிறார்கள்; எப்படி மக்களைக் கவருகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எத்தனை மணி நேரம் ஒரு சொற்பொழிவாளர் பேசி னார் என்பதைவிட, என்ன பேசினார் என்பதுதான் முக்கியம். பெரியவர் இளம் பேச்சாளனாக இருந்த நான் ஒரு முறை குடந்தையில் ஒரு கூட்டத்தில் பேசினேன். குடந்தைப் கே. கே. நீலமேகம் கே.கே. நீலமேகம் தலைமையில் அந்தக் கூட்டம் நடந்ததாக நினைவு. அறிஞர் அண்ணா அவர்கள் சொற்பொழிவாற்ற வந்திருந்தார். என்னையும் பேசுமாறு கூறினார்கள். மிகக் குறைந்த நேரமே பேசி மக்களின் கைதட்டலையும் உற்சாக ஆரவாரத்தையும் பெற்றேன். "காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சின்ன அண்ணாமலை ஒரு கூட்டத்தில் பேசினாராம்! அவர் மலையாம்! அண்ணா அவர்கள் துறையாம்! மலையில் மழை பெய்தால்தான் துறைக்கு வருமாம்! அதனால் அண்ணாதுரையை விட அண்ணாமலையே மேல்! இப்படிப் பேசிய அண்ணாமலை
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/23
Appearance