22 பேசும் கலை வளர்ப்போம் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வேன் அந்த மலையில் பொழியவேண்டிய மழைக்குத் தேவையான மேகம், இதோ எங்களிடம் இருக்கிறது! அதுதான் கே.கே. நீலமேகம்!" இப்படி நான் கூறியதும் கையொலி! மகிழ்ச்சியொலி! அத்துடன் பேச்சை நிறுத்திக்கொண்டு "சபாஷ்" பெற்று விட்டேன். கூட்டங்களில் பாராட்டியும் கைதட்டுவதுண்டு! பேச்சை முடித்துக் கொள்ளச் சொல்லியும் கை தட்டுவ துண்டு! நான் குறிப்பிட்ட கே. கே. நீலமேகம் அவர்கள் குடந்தையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் வரவேற்புரை ஆற்றிய நிகழ்ச்சியை இங்கே சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். நல்ல உடற்கட்டும், நிமிர்ந்த நோக்கும், கொள்கை உறுதியும் கொண்ட பெரியவர் நீலமேகம், தமது வரவேற் புரையை எழுதியே படித்தார். எழுதிப் படிக்கும் நீண்ட உரைகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்பதில்லை. அதிலும் அன்று அவரது உரை மிக மிக நீண்ட உரை! அத்துடன் பிற்பகல் உணவு வேளையும் நெருங்கிவிட்டது. அடுக்கி வைத்திருந்த தாள்களில் 25-ம் பக்கத்திற்குப் பிறகு 26-ஆம் பக்கம் விட்டுப்போய் 27-ஆம் பக்கத்தைப் படித் தார். பேச்சின் தொடர்பு அறுந்துபோயிற்று, மாநாட்டுப் பந்தலில் கேலிச் சிரிப்பும் கைதட்டலும் எழுந்தது. கே. கே. என். அவர்களுக்குக் கடுங்கோபம் வந்து விட்டது! "யார் ஒரு ஆள் வரையில் தீருவேன்." இப்படி கேட்டாலும் சரி கேட்கா விட்டாலும் சரி! மட்டும் இந்தப் பந்தலில் மிச்சமிருக்கும் நான் எனது உரையைப் படித்துத்தான் அவர் கர்ச்சனை செய்தபிறகு பந்தலில் அமைதி ஏற்பட்டது. எழுதிப் படிக்கிற உரைகளானாலும்
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/24
Appearance