உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணா நிதி 23 அவற்றை ஒரு முறைக்கு இருமுறை கவனமாகப் படித்து, பக்க எண்களைச் சரியாகக் குறித்து ஒழுங்காக அடுக்கி வைத்துக்கொண்டு மக்களைக் கவரும் வகையில் குரலை உயர்த்திப் பேசவேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவே இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தி னேன். நாடக உலகிலும் திரையுலகிலும் ஓரளவு புகழ்பெற்ற நடிகர் ஒருவர் என்னுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேச ஆரணிக்கு வந்திருந்தார். அவர் பேசுவார் என்று அறிவித்ததும் நல்ல வரவேற்பு இருந்தது. தொடக்கத்தில் கடல்மடை திறந்தாற்போல் வார்த்தை களைக் கொட்டினார். அவருடைய நினைவு எங்கேயோ இருந்திருக்கிறது! மக்கள் முன் எடுத்து வைத்த கருத்துக் களோடு அவர் ஒன்றியிருக்கவில்லை. பேசிக்கொண்டே யிருந்தவர், திடீரெனத் திகைத்து நின்றுவிட்டார். ஒரு நிமிடத்திற்கு மேல் அப்படியே நின்றார். பேசிக்கொண்டு வந்த பொருள் பற்றிய தொடர்பை அப்படியே விட்டு விட்டு அவர் "இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்” எனக் கூறி அமர்ந்துவிட்டார். இதிலிருந்து புரிவதென்ன? ஒரு பேச்சாளன் மக்களுக் குச் சொல்ல முயன்ற கருத்துகளுடன் தானும் உண்மை யிலேயே இரண்டறக் கலந்திருந்தால்தான் தங்கு தடை யின்றிப் பேசமுடியும்! எங்கேயோ மனத்தை உலவிட விட்டுவிட்டு, அரங்கின் முன்னே உதடுகளை அசைத்துக் கொண்டிருந்தால் உணர்வு பூர்வமான பேச்சாக அமை யாது! சொற்பொழிவைக் கேட்பதற்கு மக்கள் சங்கீதம் கேட்க வருவது போல் வந்த காலத்தை உருவாக்கிய பெருமை அண்ணா அவர்களுக்கு உண்டு! முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது; சென்னை சேத்துப்பட்டுப் பகுதியில் அண்ணா பேசுகிறார் என்று