உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி ய 25 மல்ல; தமிழ்ப்பற்று கொண்ட சொற்பொழிவாளர்களும் காரணமல்லவா? கூட்டங்களில் பேசிப்பேசி அந்தச் சொற் களை மக்களின் உள்ளத்தில் பதிய வைத்துவிட்டதால் அல்லவா ; அவை பழகிப் போய்விட்டன! தமிழ் நூல்களை நிறையப் படிப்பதன் மூலமும், நல்ல தமிழ் ஏடுகளைத் தவறாமல் படிப்பதன் மூலமும் ஒரு தமிழ்ப் பேச்சாளர், தங்கு தடையற்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெற முடியும். நுனிப்புல் மேய்பவர்களாகப் பேச்சாளர்கள் இருந் தால், ஒவ்வொரு கூட்டத்திலும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள். அன்றாடம் ஏடுகளில் வருகிற புதிய செய்திகளைக்கூட அவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. சில பேச்சாளர்கள் ஒரு பேச்சைத் தயார் செய்து கொண்டு அதை வைத்துக்கொண்டே ஓராண்டு காலம், ஒரு சுற்று வந்துவிடுவார்கள். அதற்குப் பிறகு, மற்றொரு பேச்சைத் தயாரித்துக்கொண்டு புறப்படுவார்கள். ஒரு இடத்தில் சொன்ன கருத்தையோ அல்லது கையாண்ட உவமையையோ மற்றொரு இடத்தில் கூறுவது தவறல்ல! ஆனால், அவற்றைச் சொல்லும் கோணத்தில் மாற்றங்கள் இருந்தால்தான் பேச்சு பொலிவு பெறும்! அதே வார்த்தை கள்-அதே வாசக அமைப்பு பதிவு செய்யப்பட்ட நாடா (டேம்) போலத் திரும்பத் திரும்பப் பயன்படு படுத்தப் பட்டால் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக அவரது பேச்சைக் கேட்பவர்கள் அலுத்துக்கொள்ள நேரிடும். 5 கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கோ அல்லது