26 பேசும் கலை வளர்ப்போம் பெண்களுக்கோ யாரோ ஒருவருக்கு சென்னையில் ஒவ் வொரு ஆண்டும் திருமணம் நடத்தி வைப்பார். பெரிய அளவில் மண விழா நடைபெறும். பெரியார், அண்ணா. ஜீவா இவர்கள் எல்லாம் அந்த மணவிழாக்களில் தவறாமல் கலந்துகொள்வார்கள்.சில புலவர்களும் கலந்து கொள்வார்கள். ஒரு புலவர் (பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) மணமக்களை வாழ்த்துவோர் வரிசையில் ஒவ்வொரு முறையும் இடம் பெறுவார். முற்போக்குக் கருத்துக் கொண்டவர் என்று அவர் தன்னைச் சொல்லிக்கொண்ட போதிலும் மணவிழாவுக்கு வந்தோரைச் சிரிக்க வைப்ப தற்காக நகைச்சுவை என்ற பெயரால் படித்த பெண் களைக் கேலி செய்வார். படித்த பெண்கள் சமையற்கட்டுக்குப் போனால் கத்தரிக்காய்ப் பொரியல் சுத்தமாக இருக்க வேண்டுமென்ப தற்காக முதலில் கத்தரிக்காய்க்குச் சோப்புப்போட்டுக் கழுவுவார்கள் என்பார். காய்கறி நறுக்கும் கத்திகளில் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதற்காக அந்தக் கத்திகளை "டெட்டால்" விட்டுக் கழுவுவார்கள் என்பார். இதையே அந்த வீட்டில் நடந்த திருமணங்களில் மூன்று தடவை அப்புலவர் பேசியிருக்கிறார். ஒருமுறை நானும் இயக்குநர் பீம்சிங் அவர்களும் கலைவாணர் வீட்டில் நடந்த நாலாவது திருமணத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். பீம்சிங் வருவதற்குச் சிறிது தாமதமாகிவிட்டது. "என்ன பீம்! திருமணம் முடிந்திருக்குமே! அண்ணா பேச ஆரம்பித்து விடப்போகிறார்!வாருங்கள் விரைவாக!" என அவசரப்படுத்தினேன். "அவசரப்படாதீங்க சார்! இப்பத்தான் அந்த... ப் புலவர் கத்தரிக்காய்க்கு சோப்பு போட்டுக்கொண்டிருப் பார்" என்றார் கேலியாக!
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/28
Appearance