உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணா நிதி - 27 பேசியதையே பேசுதல் அதுவும் ஒரே ஊரில் பேசுதல் - அதிலும் ஒரே வீட்டுத் திருமணத்தில்-அல்லது நிகழ்ச்சியில் பேசுதல் எந்த அளவுக்கு விரும்பத்தகாத தாகப் போய்விடுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு! வேறு சிலர்,சில சொற்பொழிவாளர்கள் பேசியதையே தாங்களும் பேசி அவர்களைப் போல மக்களின் பாராட்டு தலைப் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டுத் தோல்வியை அணைத்துக் கொள்வதும் உண்டு! க காங்கிரஸ் ஆட்சியாளரைச் சாடுவதற்காக நான் கூட்டங்களில் புண்யகோடி என்பவர் வறுமையின் காரண மாகத் தன் குடும்பத்தோடு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சியை மிகுந்த சோகப் பெருக்குடன் விவரிப்பது உண்டு!எதிரில் இருந்து கேட்கும் மக்கள் கண்ணீர் வடித்திடுவர்! புண்யகோடியும் அவரது மனைவியும் மட்டுமல்ல; பதின்மூன்று வயது மணிமேகலை என்ற மூத்த பெண்ணும் எனத் தொடங்கி, ஒரு வயதுப் பிஞ்சுக்குழந்தை வரை ஆறு பிள்ளைகளும் பெற்றோருமாக எட்டுப்பேர் வறுமைக்குப் பலியாயினர் இந்த ஆட்சியிலே என்று உணர்ச்சி கொப் பளிக்க உரையாற்றுவேன். என்னுடன் கூட்டங்களில் கலந்து கொள்ளும் எனது நண்பர் காட்டூர் இராமய்யா அவர்கள் மேடைகளில் பேசும் ஆர்வம் கொண்டவர், நல்ல நண்பருங்கூட! அவர் சட்டமன்றத் தேர்தலில் 1962-ம் ஆண்டு போட்டியிட்டார்-கழகச் சார்பு வேட்பாளராக! அவரது தொகுதியில் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புண்ய கோடி கதையைச் சொல்லி மக்களை உருகிட வைக்க வேண்டுமென்று நினைத்திருக்கிறார். பெருங்கூட்டம் கூடியிருந்தது, வேட்பாளர் பேசுவார் என அறிவிக்கப்பட்டது! வேட்பாளர்கள் எப்போதுமே குறைந்த நேரம் பேசி, வாக்காளர்களிடம் ஆதரவு கோரி