உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 45 வேண்டுமென்று காத்துக் கொண்டேயிருந்தேன். அவர் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவருக்கு இந்த லகர- ளகரப் பிரச்சினைதான். "தி. மு. கழகத்தை எடுத்துக் கொல்லுங்கள்! அவர்கள் பேசுவதை எடுத்துக் கொல்லுங்கள்! உதாரணத்திற்கு திருவல்லுவரை எடுத்துக் கொல் லுங்கள்." டாக்டர் இப்படிப் பேசிக்கொண்டேயிருந்தார்! நான் உடனே குறுக்கிட்டு, "தலைவர் அவர்களே! ஒரு பாய்ண்ட் ஆப் ஆர்டர்!" என்றேன். அப்போது சபாநாயகர் கிருஷ்ணாராவ்! தங்கமான மனிதர்! மழலைத் தமிழ் பேசக் கூடியவர்! "என்ன பாய்ண்ட் ஆப் ஆர்டர்!" என்றார். "பேசுகிற உறுப்பினர்.... கொல்லுங்கள்! கொல் லுங்கள்?! என்று பலாத்காரமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாரே? அது சரியா?” ... என்று கேட்டுவிட்டு உட்கார்ந்தேன். உடனே சபா நாயகர் கிருஷ்ணாராவ் அந்த உறுப்பினரைப் பார்த்து "மிஸ்டர் அவர்களே! பலாத்காரமாகப் பேசாதீர் கள்" என்று எச்சரிக்கை செய்தார்! என் எதிரே அமர்ந் திருந்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அந்த உறுப்பினருக்குத் தாங்க முடியாத வெட்கம்! எனக்குப் பெரிய வெற்றி என்று எண்ணிக் கொண்டேன். 99 தமிழின் தனிச்சிறப்பு வாய்ந்து“ழ” கரமும் சில பேச்சாளர்களின் வாயில் சிக்கிப் படாத பாடுபடுகிறது! தமிழையே "தமிஷ்” என்றுகூட உச்சரிக்கிறார்கள் "வாழு! வாழவிடு” என்று சொல்லக் கருதி; "வாலை! வாலைவிடு" என்று சொல்லுகிறார்கள். சித்திரமும் கைப்பழக்கம் - செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கேற்ப முயற்சி எடுத்து, அத்தகைய தவறான உச்சரிப்புக்களை நீக்கிக்கொள்ள முடியும். பேச்சாளராகப் பெயர் எடுக்க விரும்புவோர் உச்சரிப்பில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.