20 11
- சொல்லும் கருத்துக்கள் தெளிவாக அழகான சொற்
களில் தர்க்கமுறைக்கு மாறுபடாது அனுபவத்துடன் எடுத்துக்காட்டுகளோடு கேட்பவர் உள்ளத்தில் ஊடுருவு மாறு, உணர்ச்சி தோன்ற "உண்மைதான் சொல்வது" என்று கேட்பவர் உணரும்படி பேச்சு அமைந்திருக்க வேண்டும். இப்படியிருப்பதுதான் சிறந்த பேச்சு. இதுதான் பேச்சின் இலக்கணமுமாகும்" . என்று பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் அவர்கள் அழகுபடக் குறிப்பிடுவார். "பேச்சு என்பது ஒரு கலை; பேராற்றல் வாய்ந்தது; முத்தொழில் புரியும் வல்லமை வாய்ந்தது. பேச்சைக் கலையாக்குவது அறிவுடைமை. மேடைப் பேச்சு, நாட்டை வளப்படுத்தும்; வாக்காளரைப் பண்படுத்தும்; சட்ட சபையைச் சீர்செய்யும்; நல்லமைச்சு அமைக்கும்” என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. பொழிந்துள்ளார். மேடைப் பேச்சால் இவற்றையெல்லாம் காணமுடியும் என்பதற்கு பதிலாக இவற்றையெல்லாம் காணத்தக்க அளவுக்கு மேடைப் பேச்சு அமையவேண்டும் என்பதைத் தான் திரு.வி,க. அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது. மாலையில் இசை நிகழ்ச்சியென்றால் காலையில் ஒரு முறை இசைவாணன், தன் குழுவினருடன் இல்லத்திலோ, அல்லது தங்கியிருக்கும் விடுதியிலோ எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொள்கிறான். இரவு நாடகமெனில், பல இடங்களில் நடைபெற்றுப் பழகிப்போன காட்சிகள் என்றாலுங்கூட, காலையிலோ