48 பேசும் கலை வளர்ப்போம் களுக்குப் பதிலாக மதிப்புக்குரிய கத்தாழைக் கிழங்குகள் என்று 'சொல்' இடம் மாறிவிட்டது! அவசரப்பட்டுப் பேசு வதால் வருகிற வினை! அதே மாநாட்டில் இன்னொருவர்! கவித்துவம் கொண்டவர்! அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்த இலக்கியப் பேச்சாளர் ஒருவரைக் கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு, தானே அந்த கூட்டத்தில் கேலிக்குரியவரானார். « "அந்தக் காங்கிரஸ் இலக்கியப் பேச்சாளர், சீதையை மணக்க இராமன் அயோத்தியாபுரியில் ஜனகனின் வில்லை முறித்தான் என்று பேசினார்! பாவம்; அந்த இலக்கியப் புலிக்கு, ஜனகனின் தலைநகரம் அயோத்தியாபுரியா? அஸ்தினாபுரியா? என்று கூடத் தெரியவில்லை!" என்று ஏளனம் செய்தார்! மேடையிலிருந்து அண்ணா, நான், பேராசிரியர், நாவலர், சம்பத், நாஞ்சிலார் அனை வரும் சிரித்துவிட்டோம். அதற்குள் நண்பர் ஆசைத்தம்பி குறுக்கிட்டு "யோவ்! ஜனகன் தலைநகரம் மிதிலாபுரி அய்யா!" என்று திருத்தினார். அத்துடன் விட்டாரா அந்தப் பேச்சாளர்? "மன்னிக்கவும்! நான் இராமாயண ஞாபகத் தில் தவறாகக் கூறிவிட்டேன்" என்று மக்களை நோக்கிச் சொன்னார்! மாநாட்டுப் பந்தல் சிரிப்பொலியால் அதிர்ந்தது! மிக நினைவு இழையில் வார்த்தை முத்துக்களைக் கோப்ப தற்கேற்ற நிதானத்தன்மை பேச்சாளர்களுக்கு அவசியம். ஆங்கிலப் பேரறிவாளர் அடிசன் அடிசன் பதினெட்டாம் நூற்றாண்டில் புகழேணியில் இருந்தவர். அவர் ஒரு முறை பேச முற்பட்டு "I conceive, conceive, conceive" என்று மூன்றுமுறை மூச்சுத்திணற கூறிக்கொண்டே நின்றாராம்! "கன்சீவ்" என்பதற்கு "நினைக்கிறேன்" என்றும் பொருள் உண்டு! "கருவுற்றிருக்கிறேன்" என்றும் பொருள் உண்டு!
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/50
Appearance