உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 49 அடிசன் இப்படித் திணறிக் கொண்டிருந்தபோது, எதிரேயிருந்த ஒருவர் எழுந்து "அடிசன் மூன்று முறை கருவுற்றார்! ஆனால், குழந்தையைத்தான் பெறவில்லை” என நகைச்சுவை பொங்கிடக் கூறினாராம். ஆங்கில நாட்டுப் பெரும் பேச்சாளரான டிசரலி, முதன் முதலில் பாராளுமன்றத்தில் பேச அஞ்சி நடுங்கினாராம்! "நான் படைக்குத் தலைமையேற்றுப் போர்க்களம் நோக் கிச் செல்ல அஞ்சிடமாட்டேன்; ஆனால் முதன் முதல் பாராளுமன்றத்தில் பேசத் தொடங்கிட நான் பெரிதும் நடுங்கினேன்" என்று கூறினாராம்! அப்படித் தோல்வி மனப்பான்மையுடன் பேச்சாளராகத் தொடங்கி, பின்னர் அவரே மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அச்சத்தை விரட்டி, அதற்குப் பிறகு பெரும் பேச்சாளர் என்ற கீர்த்திக் கொடியை நாட்டினார். 12 மக்களுக்குத் தெரியவேண்டியதை- பேசுதல். மக்களுக்குத் தெரிந்ததைப் பேசுதல். தனக்குத் தெரிந்ததைப் பேசுதல். தனக்குத் தெரியாததைப் பேசுதல். இப்படிச் சில வகைகளாகப் பேச்சுக்களைப் பிரித்துக் கொள்ளலாம். வரலாற்றுச் சொற்பொழிவு, விஞ்ஞானச் சொற்பொழிவு, இலக்கியச் சொற்பொழிவு, பொருளா தாரச் சொற்பொழிவு, இவ்வாறு தனித் தனியான சிறப்புச் சொற்பொழிவுகள் பெரும்பாலும் கருத்தரங்குகளிலேயே எடுபடும். அதற்கு ஒவ்வொரு பொருள் குறித்தும் ஆழமான நூலறிவும், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இல்லை யேல் அரங்கின்றி வட்டாடுவதுபோல ஆகிவிடுமென Gu-4 Dinu