பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.பிராணாயாமம் ஒரு விளக்கம் காற்றைப் பிடிக்கும் கலைக்கு மற்றொரு பெயர்தான் பிராணாயாமம் ஆகும். தமிழிலே பிராணாயாமம் என்கிறார்கள். சமஸ்கிருத மொழியிலே பிராணா அய்மம் என்கிறார்கள். பிராணாயாமம் என்பதை பிராணன்+யாமம் என்று பிரிக்கலாம். பிராணன் என்றால் காற்று. அதாவது உயிர்க்காற்று. யாமம் என்றால் கட்டுதல் என்று பொருள். நுரையீரலுக்குள்ளே அதிகக் காற்றை இழுத்து சுவாசித்து, அங்கே உயிர்க்காற்றை அதிகமாக பெற்றுத் தேக்கி கட்டி வைத்தலைத்தான் பிராணாயாமம் என்கிறோம். பிராணா அய்மம் என்ற சமஸ்கிருதச் சொல்லை நாம் பிரித்துப் பார்த்தால் பிராணன்+அய்மம் என்று பிரிகிறது. பிராணன் என்றால் காற்று என்று உங்களுக்குத் தெரியும். அய்மம் என்றால் நீளமாக (Long) ஆழமாக (Deep) காற்றை இழுத்தல் என்பது பொருள். இரண்டு சொற்களுமே, பிராண வாயுவை நுரையீரல்களுக்குள் எவ்வாறு அதிகமாகப் பெற வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை தந்திர நெறிகளைத் தந்திடவே முயல்கின்றன. பிராணன் என்ற சொல்லுக்கு காற்று என்பது மட்டும் பொருள் *lẩ6). 6)Isốlsmư (Strength) gởg) (Energy) 2 túlfgå,$) (Vitality) ஃபிர் (Life) சுவாசம் என்றெல்லாம் பலப்பல அர்த்தங்கள் பொதிந்து ই-চাচাচা,