பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரின்பம் தரும் பிராணாயாமம் 35 - 3. உத்பிஜ்ஜம் என்றால் வித்து, அல்லது விதைகளிலிருந்து தோன்றுவன. வேர், கொடி, கொம்பு, கிழங்கு போன்றவற்றிலிருந்து தோன்றும் தாவர வகைகள். 4. சராயுஜம் என்றால் கருப்பையுள் தோன்றுவன. மனிதர், விலங்குகள் போன்றவை இவ்வகையில் சேரும். எழுவகை பிறவி என்பார்களே ! அதை விளக்கும் வகையில்தான் இந்த பிரிவுகள் விளக்கம் கூறியிருக்கின்றன. எழுவகைப் பிறவிகள் என்றால், அந்த ஒவ்வொன்றிலும் எத்தனை பிரிவுகள் பேதங்கள் இருக்கின்றன என்றும் நமது முன்னோர்கள் கணக்கிட்டு கூறியிருக்கின்றனர் பாருங்கள். இந்த கணக்கு நமக்கு உதவுமா, உற்சாகம் தருமா என்றெல்லாம் பார்க்காதீர்கள். அவர்கள் அறிவுத் தெளிவை, ஞானத்தின் வலிமையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இங்கே தந்திருக்கிறேன். எழுவகைப் பிறப்புகளும் அதன் கணக்குகளும் இப்படித்தான். தாவரம் - 19 லட்சம் பேதங்கள் . நீர் வாழ்வன - 15 லட்சம் பேதங்கள் ஊர்வன - 15 லட்சம் பேதங்கள் பறப்பன. (பறவை) 10 லட்சம் பேதங்கள் விலங்கு வகை - 10 லட்சம் பேதங்கள் மனிதர் - 9 லட்சம் பேதங்கள்

. தேவர் - 11 லட்சம் பேதங்கள் இப்படி 84 லட்சம் உருவ வேற்றுமையில் உடல் கொண்டு உயிர்கள் உலகில் இயங்குகின்றன என்பது தான் நமது முன்னோரின் கணக்கு. பறவை இனத்தைப் புள் என்பர். இந்தப் புள்ளினத்தில் பிறந்த உடனே, பிறந்த பறவை பறக்கும் ஆற்றல் கொண்டது என்பார்கள். அதிசயிக்கத்தக்கதுதானே!