பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


[14. நம்ப இயலாத இன்பப் பயன்கள்) பிராணாயாமத்தால் பெறுகின்ற இன்பங்களையெல்லாம். பட்டியல் இட்டு இதுவரை பார்த்து வந்தோம். உடலுக்குள்ளே புகுந்த காற்றானது, உயிர்ப்பாகி உடலினை உன்னத சக்திக்குள்ளே உவந்து உலாவரச் செய்கின்றது. உள்ளுறுப்புக்களையெல்லாம் வல்லமை மிக்கனவாக்கி, வாழ்வாங்கு வாழ்விக்கிறது என்பதையும் இப்போது நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். - பாடியுள் நின்ற பகைவரைக் கட்டும் திருமூலர் தனது திருமந்திரத்தில் இப்படி பாடுகிறார் (641) பாடி என்றால் உடம்பு என்று அர்த்தம். அதனுள்ளே இருக்கின்ற பகைவர்களை கட்டுப்படுத்தி விடும் என்றால் அந்தப் பகைவர்கள் என்பது ஐம்புலன்கள்தான். ஐம்புலன்களை அடக்கி ஆட்சி செய்கின்ற மனப் பக்குவமும் மாண்புமிகு எழுச்சியும் பெற்றுவிட்டால், அவர் மாமனிதர் ஆகிவிடுவார். மற்றவர்களுக்கும் மேலான மாமுனிவராகி, மகாகுருவாகவும் மாறி விடுகிறார். இதுவரை நாமே பிராணாயாமத்தினை முயன்று செய்து வந்தால் அரிய இன்பங்களையும், துன்பம் கலவாத பெரிய சுகநிலைகளையும் பெறலாம். ஆன்ற பொறுமையும் விடாமுயற்சியுள்ள திறமையும், உங்களுக்கு நிறையவே சுகம் பெற உதவும். ஆனால், இந்தப் பகுதியில் கூறப்படுகின்ற செய்திகள் எல்லாம் பிராணாயாமத்தின் மூலமாகப் பெறக்கூடிய பேரின்பங்கள்தான் என்றாலும், இதற்கு நீங்களும் உங்கள் முயற்சியும் பேரார்வமும்