பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

ஏழாவது மாதத்தில் உறுப்புக்கள் பூரண வளர்ச்சி அடைகின்றன. சிசு புரளும் எட்டாவது மாதத்தில் சிசு வுக்கு ஜி வ ச க் தி-ஊட்டம் (energy) உண்டாகிறது. இச்சக்தி பிள்ளைக்கும் த ய் க் கு ம க ஊடுருவிப் பரவி நிற்கும். கருப்பிள்ளை ஜீவசக்தியுடன் முண்டும் போது, தாய் திடீரென்று சோர்வடைவதும், தாய் ஜீவத் துடிப்புடன் காணப்படுகையில் சிசு சோர்ந்திருப்பதும் இயல்பு.

சிசுவின் இருதயத்துடிப்பு நன்கு தெரியும்.

ஒன்பதாவது மாதத்தில் கருப்பையினுள் சிசு புரள்வ தைக் கண்களால் பார்க்க முடியும் -

பத்தாவது மாதத்தில் சிசு நிறைமாதம் முடிந்து முழு மையான உருவத்துடன் ஜனனம் ஆகிறது.

கர்ப்பகாலம் ஏறத்தாழ இருநூற்றெண்பது நாட்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது. அதாவது, ஒன்பது மாதமும் பத்து தினங்களும் ஆனபின் பிரசவம் ஆகிவிடும். அதற்குமேல் கர்ப்பவாசத்தைச் சிசு மேற் கொள்வதில்லை என்று வைத்திய சாஸ்திரம் கூறுகிறது. இது பொதுப் படையான வரம்பு, கொஞ்சம் முன்பாகவோ, அல்லது பின்பாகவோ குழந்தை ஜனனம் ஆவது விதிவிலக்கு. ஆளுல், சாதாரணமாக, பத்துமாதம் உன்னைச் சுமந்து பெற்றேனே?’ என்று தாய் வருந்துவதும், பட்டினத்தடி கள், முந்தித்தவம் கிட்ந்து முந்நூறு நாள் சுமந்து: என்று தாயின் தவத்தையும் பிரசவத் தொல்லையையும் பரிடுவதும் பிரசவகாலக்கணிப்புக்கு ட்ைடாத வேறு வகைச் செய்திகளாகின்ற்ன!.