பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனனுரை

புதிய துறை புதிய உள்ளம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் காதல்’ அலுவலகத்தில் பணி இயற்றியபோது, உடற்கூறு, உடல் இயல்பற்றிய விவரங்களைப் படித்தறியும் அருமையான வாய்ப்புக் கிட்டியது. அத்தொடர்புதான், இத்துறையிலும் நான் அடியெடுத்துவைப்பதற்கு வழி அமைத்துக்கொடுத் திருக்கிறது. அதன் விளைவுதான், இந்நூல்.

பெண் சமுதாயத்துக்குப் பயன்தரும் நூல்களைத் தொடர்ந்து வெளியிட வி ரு ம் பி ய பதிப்பகத்தின் உரிமையாளர், பேறுகாலப்பிரச்னைகள் குறித்து ஒரு நூலை எழுதித் தரும்படி கூறினர். அந்த அன்பின் ஆணப்படி இந்நூலே எழுதியிருக்கிறேன். வெறும் ஏட்டுச் சுரக்காயாக மாத்திரம் நூல் அமைவதைத் தடுத்து, ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் நடைமுறை வாழ்வில் பயன்தரும் வகையில் பலபல அரிய விஷயங்களை மிகவும் கவனத்துடன் சேகரம் செய்து எழுதியிருக்கிறேன். எனக்கு உதவிய வைத்திய ஆய்வு நூல்கள் அனைத்துக்கும் தலை வணங்குகிறேன்.

சில நூல்களைச் சரிபார்த்து, இதிலுள்ள படங்களை வரைந்து தந்தவர் எங்கள் ஊர் டாக்டர் திரு. கே. வி. பாஸ்கர். அவருக்கு நன்றி.

இந்நூலினை மிகவும் நல்ல முறையில் வெளியிடும் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. எஸ். வடிவேலு அவர் களின் ஆழ்ந்த அன்பை நான் நன்றியுடன் நினைத்துக் கொள்வேன்.

பூவை. எஸ். ஆறுமுகம்.