பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

மாதத்திற்குப் பிறகு உடலுறவு கொள்ளுவது கூடவே கூடாது; உடலுறவு கொண்டால், பிரசவத்தில் பல தொல்லைகளைக் கருப்பவதி அனுபவிக்க நேரிடும்; அதன் விளைவாக, பிறக்க விருக்கும் சிசுவுக்கும் ஆபத்து விளைய லாம்! மனைவி கருவுற்ற காலத்தில், அவள் கணவன் தகாத நடவடிக்கை மூலம் வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டு அதன் பலனுக ரகசிய நோய்கள் உண்டாகி, அப்புறம் அவன் தன் சொந்த மனைவியுடன் கூடினல் அவளுக்கும் அந்நோய் எளிதில் பரவி, அக் கருப்பவதிக் கும் அவள் கர்ப்பத்துக்கும்கூட துன்பமுடிவு ஏற்படும் நிலை உண்டாகக் கூடும்.

நீர், மலம், ரத்தம், உடல் உஷ்ண நிலை ஆகியவற்றை தொடக்கத்திலிருந்தே அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளவேண்டும்!

ஒரு நூதனமான இனிய நல் விருந்தாளியை-ஒரு புத்தம் புதிய ஆத்மாவை இரு கை ஏந்தி, இன்முறுவல் ஏந்தி வரவேற்பதற்குள் ஒருதாய் மேற் கொள்ள வேண்டி கருத்துக்கள் இன்னும் எவ்வளவோ உள்ளனவே!...