பக்கம்:பொங்கற்பரிசு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தளிரெல்லாம் பூந்தாது ;

குளமெல்லாம் பூக்கள் ;
தாழ்குடிசை சிறப்பெல்லாம்
சிட்டின் ஆர்ப் பாட்டம்;
குளிரொடுக்கி மூடுபனிக்
குறையொடுக்கி வந்த
நம்பொங்கல் புதுப்பொங்கல்

தமிழ்ப்பொங்கல் வாழ்க!

2




முற்றாத மாதுளையின்

விதையொத்த சம்பா
முளையறியாப் பச்சரிசி
கழைதந்த வெல்லம்
புற்றோர நீளாற்றுப்
புனல்கூட்டி ஆப்பால்
புதுப்பானே உலையேற்றப்
பொங்கிவரும் பொங்கல்
நற்றமிழர் புதுப்பொங்கல்
தமிழ்ப்பொங்கல் வாழ்க!
நலிவெல்லாம் பறந்ததுவாம்:
பரந்ததுவே இன்பம்!
பெற்றோம்நாம் புத்தாண்டை;
வளமெல்லாம் பெற்றோம்!
பெருமகிழ்ச்சி ஊரெங்கும்;
வீடெங்கும் வாழ்த்தே!

3

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/55&oldid=1147032" இலிருந்து மீள்விக்கப்பட்டது