உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி - இங்கிருந்து குடை "சே! சே! அப்படியொன்றுமில்லை யூரை விட சங்கரன்மலை அருகாமையில் இருக்கிறது! சங்கரன் மலையைத் தாங்களும் பார்க்க வேண்டுமென்று நான் ஆசைப் பட்டேன்! அங்குள்ள மாளிகை அமைப்பும் அரண் வலிவும், அகழியின் தோற்றமும் தங்களை மிகவும் கவரும்! என் யோசனை தங்களுக்குப் பிடித்தமில்லையென்றால் குடையூருக்கே போக லாம்; எனக்கு அதிலொன்றும் ஆட்சேபணையில்லை!" மாயவர், குன்றுடையானை இடைமறித்து; "இல்லை! இல்லை! வேண்டாம் வேண்டாம்! சங்கரன்மலை மாளிகைக்கே போவோம்! குழந்தைகள் காணமற் போனது அந்த இடத்தில் தான் என்கிற போது; எனக்கும் அந்த இடத்தைப் பார்க்க ஆவலாக இருக் கிறது - அங்கேயே போகலாம்!" என்றார். செல்லாண்டியம்மன் கோயிலில் இருந்து தென்மேற்காகச் சென்று அமராவதி ஆற்றின் தென்கரையில் உள்ள குடை யூருக்குச் செல்வதைக் காட்டிலும், அந்தக் கோயிலில் இருந்து சற்றுத் தென்கிழக்காகத் திரும்பி மதுக்கரையைத் தாண்டிச் சென்றால் மிக விரைவில் சங்கரன் மலையை அடைந்துவிட லாம். மாயவரும் அங்கேயே போகலாம் என்று விருப்பம் தெரிவித்தவுடன் குன்றுடையான் தாமரைநாச்சியாரையும் அருக்காணியையும் பார்த்து வண்டியிலேறுமாறு கண்களால் பணித்தான். சங்கரன்மலைக்குத் தனது கணவனுடன் ஐந்தாறு முறை தாமரைநாச்சியார் வந்திருக்கிறாள் என்றாலும் ஒவ்வொரு முறையும் அவள் வந்த போது அந்த ஊர் மாளிகையில் தனது குழந்தைகள் காணாமற்போன நிகழ்ச்சி அவளைப் பெரிதும் வாட்டியிருக்கிறது. ஒரு தாயின் இதயம், இழந்துவிட்ட குழந்தை களுக்காக எப்போதுமே புலம்பிக் கொண்டிருக்குமெனினும் அவற்றைப் பறிகொடுத்த இடத்திற்கு வரும்போது; அந்தக் குழந்தைகளுக்காகக் கட்டப்பட்ட சமாதிகளைக் காணுவது போன்ற உணர்வைத் தானே பெற்றுத்தவிக்கும்! அதனால் தாமரை தனது கணவன் அழைத்த போது சில நேரங்களில் சங்கரன்மலைக்கு வருவதைத் தவர்த்திருக்கிறாள். ஆனால் இப்போது தனது கணவனின் யோசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. என்றைக்கோ இழந்து விட்ட செல்வங்கள் உயிரோடிருக்கி றார்கள் என்று சூசகமாகத் தெரிவித்த மாயவர்; அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் எப்படியிருக்கிறார்கள் என்ற முழுச் -