உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - செய்தியைச் சொல்லப் போகிறார் அதுவும் அந்தச் செல் வங்கள் தனது கையை விட்டுப் போன அதே சங்கரன்மலை யில் சொல்லப் போகிறார் என்றதும் தாங்கொணாதமகிழ்ச்சி யால் நெஞ்சம் கனத்துப் போயிருந்தாள். அண்ணன்மார் இரு வர் குழந்தைப் பருவத்திலே காணாமற்போய்விட்டார்கள் என்பதைத் தாயாரின் இடைவிடாத சோகக் கண்ணீரால் எழு தப்பட்டதைப் படித்தறிந்திருந்த அருக்காணித் தங்கமும் ஏதோ சில முக்கியமான விபரங்களுடன் மாயவர். சங்கரன்மலைக்குத் தங்களோடு வருகிற சம்பவத்தைப் பெரிய வாய்ப்பாகவே கருதி உற்சாகமடைந்தாள். - குடையூர் மாளிகை வண்டியில் குன்றுடையான், தாமரை நாச்சியார். அருக்காணித் தங்கம் ஆகியோர் ஏறி அமர்ந்து கொள்ள; வண்டிக்கருகாமையில் தனது குதிரையில் மாயவர் பயணம் செய்ய பாதுகாப்பு வீரர்கள் சிலர் குதிரைகளில் வர அன்றிரவே அவர்கள் சங்கரன்மலை மாளிகைக்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவர்கள் மாளிகைக்குள் இருப்பது பற்றிய தகவல் எதுவும் தெரியாமல் தான் பொன்னர் சங்கர் இருவரும் சின்னமலைக் கொழுந்துவையும் ஆரிச்சம்பட்டி குடும்பத்தினர், மற்றும் வீரர் களையும் அந்த ஊரின் முகப்புக்குள் அழைத்து வந்து சேர்ந்தனர். சங்கரன்மலை மாளிகை வாசல் முகப்பில் வழக்கத்திற்கு மாறாக வீரர்களின் நடமாட்டமும் காவலர்களின் பந்தாக்களும் அதிகமிருப்பதைக் கண்ட பொன்னரும் சங்கரும் வீரமலைச் சாம்புவனைத் திரும்பிப் பார்த்தனர். சற்று நேரம் தாமதியுங்கள்; நான் உள்ளே சென்று யார் வந்திருக்கிறார்கள் என்று விபரமறிந்து வருகிறேன்" இவ்வாறு கூறிவிட்டு வீரமலைச் சாம்புவன், தனது குதி ரையை சங்கரன்மலைக் கோட்டை வாசலை நோக்கித் தட்டி விட்டான். கோட்டை வாசலில் வீரமலை சாம்புவனை அடையாளம் தெரிந்து கொண்ட சங்கரன்மலை வீரர்கள் அவனுக்குத் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்து கோட்டைக்குள் செல்ல அனு மதி மட்டுமல்ல; அவனை அழைத்துக் கொண்டே கோட்டைக் குள் சென்றார்கள். 154