உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் கொண்ட போது பாச உணர்வு மட்டுமே ஓங்கி உயர்ந்தது! .. .. 'தாமரை! இதோ இவன்தான் வையம்பெருமான்; என் மகன்! இவர்கள் என் மகள்கள்: முத்தாயி, பவளாயி!' என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் தாமரை நாச்சியார்; கரைபுரளும் உற்சாக வெள்ளத்துடன் "தெரியுமே! செல் லாண்டியம்மன் கோயில் திருவிழாவிலேயே பார்த்தோமே!" என்று கூறிக்கொண்டே அவர்களிருவரையும் தன்னருகே இழுத்து அணைத்துக்கொண்டாள்! "என் பெயர் அருட்கன்னி! என் அம்மாவும் அப்பாவும்; ஏன் எல்லோரும் என்னைச் செல்லமாக அருக்காணி தங்கம் என்று அழைப்பார்கள் - என்று முந்திக் கொண்டாள் அருக் காணி தங்கம்! அவளருகே பாசமுடன் சென்று அவளது தலை யைக் கோதி உச்சி மோந்தார் சின்னமலைக் கொழுந்து! அதற் குள் சிலம்பாயி, அருக்காணியைத் தன் பக்கம் இழுத்துத் தழு லிக் கொண்டாள். குன்றுடையானின் விழிகளைப் போலவே தாமரைநாச்சி யின் விழிகளும் பொன்னர் - சங்கர் இருவரையும் மொய்த் துக் கொள்ளத் தவறவில்லை! நெடுநாள் பகை கொண்டிருந்த இரு குடும்பங்கள் ஒன்று கூடி மகிழ்வது கண்ட மாயவர்: மெளனமாக அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டு ஒரு ஓர மாக ஒதுங்கியிருந்தார். குன்றுடையான், தாமரை நாச்சியார் இருவரைக் காட்டிலும் அவரது விழிகள்தான் பொன்னர் சங்கர் இருவரையும் விட்டுச் சிறிதும் அகலாமல் அப்படியே அவர்களது தோற்றத்தையும் அழகையும் கம்பீரத்தையும் பருகிக் கொண்டிருந்தன என்று சொல்ல வேண்டும். " - அவர்களும் மாயவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அன்று மாரிக் கவுண்டன்பாளையத்தில் காட்டுப் பன்றிகளுடன் அவர் கள் போரிட்டபோது அங்கு வந்து, தங்கள் ஆசானின் பாச றைக்கு வழி கேட்டவர் அல்லவா; அவர் எங்கே இங்கு வந் துள்ளார் என்ற ஆச்சரியம் அவர்களுக்கு! "என்ன மாயவரே; ஒதுங்கி நிற்கிறீர்கள்?" என்று கேட்டுக் கொண்டே அவரிடம் நெருங்கிச்சென்ற குன்றுடையான்; சின்ன மலைக் கொழுந்தைப் பார்த்து 'மைத்துனரே! இவரைத் தெரிகிறதா?" என வினவியதும் உடனடியாகப் புரிந்து கொள்ள முடியாத தவிப்பை சின்னமலைக் கொழுந்து, தனது அசடு வழியும் முகத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார். 158 B