உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கலைஞர் மு.கருணாநிதி இவர், தலையூர்க் காளியின் அமைச்சர்! பெயர் மாயவர்! இவரைப் பார்த்ததேயில்லையா? அல்லது கேள்விப்பட்டது கூடக் கிடையாதா?" இப்படிக் குன்றுடையான் கேட்கவே : சின்னமலைக் கொழுந்து தன்னை சமாளித்துக்கொண்டு; அட்டா! அவரா? கேள்விப்பட்டது மாத்திரமா? நான் பார்த்திருக்கிறேனே! தாடியும் மீசையும் இப்போது அவரை அடையாளமே தெரியாமல் மாற்றிவிட்டது! பல ஆண்டு காலம் நமது தெற்குச்சீமையை விட்டே.... என்று பேச்சை முடிப்பதற்குள் மாயவர், புன்னகை புரிந்தவாறு அவரைப் பார்த்து; .. "பல பகுதிகளில் அலைந்து திரிந்து விட்டு திரும்பத் தலை யூருக்கே வந்து விட்டேன்!" என்று பதில் அளித்தார். எல்லோரும் உட்காருங்கள்! களைப்பாக இருக்கும்! முத லில் சிற்றுண்டி ஏதாவது அருந்திக் கொண்டே பேசலாம்! என்று உபசரிக்கத் தொடங்கினான் குன்றுடையான்! மாளிகையின் எழில் ததும்பும் அந்தக் இருக்கைகளில் அனைவரும் அமர்ந்தனர். கூடத்திலேயிருந்த பொன்னர், சங்கர், வீரமலை நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்ட சின்னமலைக் கொழுந்து, "ஏன்? நீங்களும் உட்காருங்கள்! என்று அன்பு பொங்கச் சொல்லவே; மீண் டும் ஒரு முறை அனைவரது விழிகளும் பொன்னர் - சங்கரை வட்டமிட்டன! தாமரைநாச்சியின் விழிகள் அவர்களை நோக்கிய காட்சி; கடற்கரையில் காணாமற் போய் மண்ணில் புதைந்து விட்ட முத்துப் பதித்த கம்மல்களை எடுப்பதற்குக் கரங்கள் கொண்டு கடற்கரை மணலைத் தோண்டுவது போல் இருந்தது! குன்றுடையானின் விழிகள் அவர்களை நோக்கிய காட்சி; தனது உருவம் இரண்டாகப் பிளந்து எதிரில் உள்ள நிலைக் கண்ணாடியில் தெரிவது எப்படி என்று வியப்புடன் கேட்பது போல் இருந்தது! மாயவர் விழிகள் அவர்களை நோக்கின! அந்த விழிகள் 159