உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர் - சங்கர் 41 அதை நம்பிய குன்றுடையானும் தாமரைநாச்சியாரும் உடனே செல்லியம்மனுக்குத் தேர் செய்யும் ஏற்பாடுகளை கவனித்தனர். தனது சூழ்ச்சித் திட்டத்தில் ஏமாந்து விட்ட தாமரையையும் குன்றுடையானையும் பழி வாங்க இதுதான் சமயமென்று தேர் செய்யும் தச்சர்களில் ஒருவரைப் பிடித்து செல்லாத்தாக் கவுண்டர் மற்றொரு சூழ்ச்சிக்கு வித்திட்டார்! அதன்படி தேர் ஓடும்போது திடீரென சிக்கிக் கொள்வது போல யாருக்கும் தெரியாமல் ஒரு பயங்கர சதி உருவாக்கப் பட்டது. தேர்த் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. ஆனால் விழா நாளன்று புறப்பட்ட தேர்,வீதியில் சிறிது தூரம் ஓடிய பிறகு நின்றுவிட்டது! அப்போதும் செல்லாத்தாக் கவுண்டரால் அனுப்பப்பட்ட அந்த சோதிடர்கள் வந்தார்கள். அவர்கள் ஏதோ அம்மன் குற்றம் நடந்து விட்டதென்றும் அத னால்தான் தேர் ஓடவில்லை சிக்கிக் கொண்டதென்றும் பயமுறுத்தினர்! அது மட்டுமல்ல; தேர் முழுமையாக ஓடி நிற்காவிட்டால் அந்த ஊர் மக்களுக்கே ஆபத்து என்றும் மிரட்டினர்! அதற்குப் பரிகாரம் என்னவென்றால் தேர்ச் சக் கரத்தில் யாராவது ஒரு சுமங்கலி தனது தலையைக் கொடுத்து பலியாக வேண்டும். இல்லையேல் ஊரே அழிந்து விடும் என்று அபாண்டப் பொய் ஒன்றை அவிழ்த்துக் கொட்டினர். தங்கள் குடும்பம் அழிந்தாலும் பரவாயில்லை; தான் அழிந் தாலும் பரவாயில்லை தங்களை நம்பி வாழும் ஊர் மக்க ளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று கூறி, தாமரைநாச்சி யார் தானே தேர்க்காலில் தன்னைப் பலி கொடுத்துக் கொள்ளத் தயாரானாள். நீயே போகும்போது நான் மட்டும் என்ன; இருவரும் 'சேர்ந்தே போவோம் என்று தாமரையுடன் தேர்க்காலில் படுத்துச் சாகக் குன்றுடையானும் தயாராகவே அதைத் தடுக்க ஊரே முனைந்து நின்றது! இவர்களோ கேட்க வில்லை! அன்பு வடிவம் அருள் பொழியும் உருவம் எனப்படுகிற அம்பாள்; தனது மக்களை அழிப்பாளா; என்ற எண்ணமே இவர்களுக்கு வரவில்லை! சோதிடத்தை நம்பினார் கள். செல்லாத்தாக் கவுண்டர் சூழ்ச்சி வலையில் சிக்கினார் கள். ஊராரை மீறிக்கொண்டு தேர்ச் சக்கரங்களில் போய்ப் படுத்துக்கொண்டு; தங்கள் மீது தேரை இழுக்குமாறு ஆணை யிட்டார்கள்! அப்போது அங்கே ராக்கியண்ணன் வந்துவிட் டார். அவர் செல்லாத்தாக் கவுண்டரின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார். குன்றுடையானையும், தாமரை நாச்சியையும் பார்த்து முதலில் நீங்கள் தேர்க்காலை விட்டு எழுந்திருங்கள்; நான் இந்தத் தேரை எந்தப் பலியும் கொடுக்காமலே ஓட வைக் கிறேன் என்றார்! சொன்னபடி செய்தார்! தேரில் நடத்தப் - - 168