உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி பட்டிருந்த சதி வேலையைக் கண்டுபிடித்துச் சரி செய்தார் பிறகு தேர் ஓடிற்று? 66 - திரிந்து அரண் இப்படிக் கோயில்,குளம்,தேர்,திருவிழா,அர்ச்சனை. பிரார்த்தனை என்று க்ஷேத்திரங்களுக்கு அலைந்து கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, குடையூர் மாளிகையிலேயே தங்கியிருங்கள்; அல்லது சங்கரன்மலையில் உள்ள மனையில் தங்குங்கள் ஆண் பெண் உறவில் உருவாகக் கூடிய இனவளர்ச்சிக்கு ஆண்டவன் மீது பழியைப் போடாதீர் கள் என்று ராக்கியண்ணன் சிரித்துக் கொண்டே சொன்ன போது குன்றுடையானுக்கும் தாமரைநாச்சியாருக்கும் ஏதோ ஒரு அவநம்பிக்கை தான் இருந்தது. பிறகு அவர்களே யோசித் துப் பார்த்தார்கள். சங்கரன்மலையில் உள்ள அரண்மனையில் வந்து தங்கிக் கொண்டார்கள். திருமணமான புதிதில் பட்ட ஷ்டங்கள் நீங்கி; தாமரைநாச்சியாரின் தற்காத்துத் தற் கொண்டான் பேணி" என்ற குறள்மொழிக்கொத்த செயற் பாடுகளின் விளைவாக வளமான வாழ்வு பெருகியதை அவர் கள் வீணாக்க விரும்பவில்லை. சங்கரன்மலைப்பகுதி ஒரு காலத்தில் இயற்கையின் தொட்டிலாகவே இருந்த இடம்! இளம் இதயங்களில் உணர்ச்சி அலைகளை எழும்பிடச் செய் யும் வகையில் சலசலத்து ஓடும் அருவிகளின் ஓரத்தில் ஆடும் மயிலினங்கள் பாடும் குயிலினங்கள் - துள்ளி ஓடும் மானி னங்கள் இவை சேர்ந்து இன்பம் அனுபவிக்கும் காட்சிகள் ஏராளம்! ஏராளம்! இன்று அவ்வளவு இல்லாவிடினும் இரு பது ஆண்டுகளுக்கு முன்பு குன்றுடையானும் தாமரைநாச்சி யாரும் அக்காட்சிகளில் மயங்கினார்கள்! அவர்களை இப் போது பிள்ளைகுட்டி பெற்ற பெருமக்களாக எதிரே உட்கார வைத்துக்கொண்டு; சங்கரன்மலையின் இயற்கையின்பச்சார லால்தான் இல்லற சுகத்தின் அருமையை அவர்கள் உணரத் தலைப்பட்டார்கள் என்பதோ அதை மேலும் விவரிப்பதோ அழகல்ல! உணர்ந்ததின் தொடர்ச்சியாக தாமரைநாச்சியார் கர்ப்பமுற்றது கண்டு குன்றுடையானுக்குக் கொள்ளை மகிழ்ச்சி! குடையூரிலும் விழா எடுத்துக் கொண்டாடினான்! 11 - 'சங்கரன்மலையும் விழாக்கோலம் பூண்டது! தாமரைநாச்சி யார் கருவுற்றிருக்கிற செய்தி ஆரிச்சம்பட்டிக்கும் வழக்கப்படி தெரிவிக்கப்பட்டது. அப்படி சொல்லியனுப்பியதில் தாம ரைக்கு விருப்பமில்லையென்றாலும் எதையும் மனதில் வைத் துக்கொண்டு அதற்காக அலட்டிக்கொள்ளாத குன்றுடையான் அந்தத் தகவலை உரிய முறையில் சம்பந்தி வீட்டுக்குத் தெரி வித்து விட்டான். ஆனால் கொங்கு வேளாளர் குல முறைப் 169