உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் படி கர்ப்பமுற்ற ஏழாவது மாதம் பண்டம் பலகாரங்களுடனும் பல்வகைக் கட்டுச் சாதங்களுடனும் சென்று பெரிய விருந்தும் நடத்தி பெண்ணைத் தாயார் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆரிச்சம்பட்டிக்காரராகிய நீங்கள் வருவீர்கள் என்று குன்றுடையான் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததுதான் மிச்சம்! .. இவ்வாறு கூறிக்கொண்டே மாயவர் சின்னமலைக்கொழுந்தை உற்று நோக்கியபோது, அவர் தனது கடந்த காலப் போக்கை எண்ணித் தலையைக் கவிழ்ந்து கொண்டார். "காலங்கடந்தாவது செய்து விட்ட தவறுக்காக வருந்தினால் அதைப் பாராட்டத்தான் வேண்டும்" என்று உவகை பொங்க மாயவர் கூறியதோடு, தனது விளக்கத்தையும் தொடர்ந்தார். தாமரை கருவுற்று ஏழு மாதம் ஆகிவிட்டது என்ற செய்தி, வளநாட்டில் செல்லாத்தாக்கவுண்டருக்குக் கிடைக்காமல் இருக் குமா? குன்றுடையானுக்குக் குழந்தை பிறந்தால் எதிர்காலத் தில் வளநாட்டு உரிமைக்காகக் குரல் கொடுக்கக் கூடும் என்ற அச்சம் செல்லாத்தாக் கவுண்டருக்கு ஏற்பட்டது! குன்றுடை யானோ, தனக்குச் சேரவேண்டிய நிலப்பரப்பு சேரவில்லை யென்றாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல், இருப்பதை வைத்துக் காவல் ஆட்சி நடத்துகிறவன் - அவனுக்குப் பிறக்கிற குழந்தைகளும் அவனைப் போலவே "மசை" யாக இருப்பார் கள் என்று யார் கணிக்க முடியும்? அதனால் குன்றுடையா னுக்கு குல விருத்தியே கூடாது - அது எதிர்காலத்தில் தனக் குப் பெரும்பகையாக விளங்கக்கூடும் என்று செல்லாத்தாக் கவுண்டர் முடிவு கட்டினார். தாமரை நாச்சியாருக்கு பிள் ளைப்பேறு மருத்துவம் பார்ப்பதற்காக இரண்டு மருத்துவச்சி கள் தயாரிக்கப்பட்டார்கள். செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தி யப்பனும் அந்த மருத்துவச்சிகளுக்குப் பல திட்டங்களை சொல் லிக் கொடுத்து அதற்கு வெகுமானமாக ஒரு பொற்கிழியும் அளித்து அனுப்பினார்கள். தாமரைக்குப் பிரசவ நேரம் வந்து விட்டது! வலி பொறுக்கமுடியாமல் கத்திக்கொண்டிருந்த போது குன்றுடையான் என்ன செய்வதென்று புரியாமல் மனைவியின் துடிப்பைப் பார்த்து துவண்டு போனான், அந்த வேளையில்தான் மருத்துவச்சிகள் இருவர் வந்திருப்பதாகக் குன்றுடையானுக்குச் செய்தி வந்தது. மனைவி படும் துயரத் தைக் கண்டு ஆண்டவன்தான் மருததுவச்சிகளை அனுப்பி வைத்திருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான். உண்மை யில் அந்த மருத்துவச்சிகளை அனுப்பி வைத்த செல்லாத்தாக் 170