உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வில்லை. அடி மேல் அடி வைத்து நடந்து வந்தது போலவே பாசறை வாசலில் வந்து நின்றது. மிகவும் களைப்புற்றவராக வும் சோகமுகத்தினராகவும் ராக்கியண்ணன் காணப்பட்டதை சிறுவன் வீரமலை பார்த்து வியப்படைந்தான். தனது ஆசானை இவ்வளவு சோர்வாக அவன் கண்டதேயில்லை. நெடிதுயர்ந்து நெஞ்சை நிமிர்த்தியவாறு மதயானை போல நடந்து வரக்கூடிய அந்த வீர உருவம் சூறாவளிக் காற்றில் ஆடி ஓய்ந்து நிற்கும் மரம் போலக் காட்சி தந்தது. வீரமலை, குதிரையைப் பிடித்து லாயத்தில் கட்டி விட்டு, தனது ஆசானின் முக மாற்றத்துக்குக் காரணம் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். பாசறைக் குள் நுழைந்த ராக்கியண்ணன். அங்கே கிடந்த சாய்வான பிரம்பு நாற்காலியில் தனது உடலைப் போட்டார் என்றுதான் சொல்ல முடியும் அமைதியாக சாய்ந்து கொண்டார் என்று கூற முடியாது. அடிக்கடி அவர்விட்ட பெருமுச்சின் ஒலி, பாசறையில் பரவியது. வீரமலை மெதுவாக நடந்து அவர் அருகே சென்று, "அய்யா, குடிப்பதற்குத் தேன் கலந்த பால் சூடாக இருக்கிறது. தரட்டுமா?" என்று கேட்டான். வேண் டாம் என்று அவர் தலையசைத்து விட்டு சாய்வு நாற்காலியை விட்டு எழுந்தார். பாசறையைக் காலடிகளால் அளப்பது போல அங்குமிங்கும் நடந்து கொண்டேயிருந்தார். 'வீரமலை!" என்று அழுத்தம் திருத்தமாக அவர் குரல் ஒலித்ததும், அவன் அவர் அருகே ஓடி நின்றான். - 44 ராக்கியண்ணனின் கை, வீரமலையின் தோளைத் தடவியது. மீண்டும் 'வீரமலை" என்ற ஒரு சோகமான அழைப்பு; ஆனால் எப்போதும் போன்று அழுத்தத்துடன்! 14 .. அழகுநாச்சி வரவில்லையா?' என்று ராக்கியண்ணன் வீரமலையிடம் கேட்டுக் கொண்டே பாசறைக்கு வெளியே வந்து அங்கிருந்த கொய்யா மரத்தின் பெரிய கிளையில் கையை அழுத்திக் கொண்டு நின்றார். அழகுநாச்சி, ஆசான் ராக்கியண்ணனின் மனைவியார்! வீரத்தைக் காதலிப்பது போலவே ராக்கியண்ணன் அழகு நாச்சியாரையும் காதலித்தார்! பாசறையிலிருந்து அவரது இல் லம் கூப்பிடு தூரத்தில் தான்! ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அழகுநாச்சியார் இல்லத்தை விட்டுப் புறப்பட்டு நடந்தே பாசறைக்கு வந்து விடுவார். ராக்கியண்ணனும் நாச்சி யாரும் பாசறைக்குள்ளிருக்கும் சோலையில் உலவியபடியே பேசி, சிரித்து உற்சாகமாகப் பொழுதைக் கழிப்பார்கள். மாலை வந்து, பின்னர் இருளின் கை ஓங்குவதற்குள்ளாக 184