உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி அழகுநாச்சியார் வீட்டுக்குத் திரும்பி விடுவார். இரவு உண வருந்தும் நேரம் வரையில் ராக்கியண்ணன் பாசறையில் இருந்து விட்டுப் பிறகுதான் வீட்டுக்குச் செல்வார்.

  1. 4

அம்மா வந்தார்கள். நீங்கள் வருவீர்கள் என்று காத்திருந் தார்கள். நேரமாகவே சற்று முன்புதான்! வீட்டுக்குச் சென் றார்கள். நீங்கள் வந்ததும் ஓடி வந்து தெரிவிக்கச் சொன்னார் கள். போய் சொல்லி விட்டு வரட்டுமா? என்று வீரமலை பணிவுடன் பதில் அளித்து விட்டு, ஆசான், என்ன உத்தரவிடுகிறார் என எதிர்பார்த்தான். .. 'நீ போக வேண்டாம். நானே வீட்டுக்குப் போகிறேன்' என்ற ராக்கியண்ணன், பெரிய கிணற்றின் சகடைக் கயிறை இழுத்து விட்டு கனமான வாளியில், தானே தண்ணீர் மொண்டு முகம், கால், கைகளைக் கழுவிக் கொண்டார். வீரமலை, ராக்கியண்ணனின் ஒவ்வொரு அசைவையும் கவனமாகப் பார்த்துக் கொண்டே அங்கு நின்றான். வீரமலை! நீ ஒரு காரியம் செய்ய வேண்டும்" என்றார் ஆசான்! 41 என்ன காரியம் அய்யா?" வீரமலை, வழக்கமான பணிவுடன் கேட்டான். ராக்கியண் ணனின் முகத்தில் வெண்மேகத்திரளாக எழுந்த சோகம், கரு மேகக் கூட்டமாக மாறியதை வீரமலையால் உணர முடிந்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு ராக்கியண்ணன், கிணற் றின் அருகேயிருந்த கருங்கல்லில் அமர்ந்தார். வீரமலையை இழுத்து அவன் தலையை மெல்லக் கோதியவாறு பேசினார். - . - "புதிய காரியம் ஒன்றுமில்லை. சங்கரன்மலைக்குப் போக வேண்டிய காரியம்தான். அங்கே போய் குன்றுடையான் எப் படியிருக்கிறார் தாமரை நாச்சியார் எப்படியிருக்கிறார் அவர்களுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எப்படியிருக் கின்றன என்ற விபரமெல்லாம் தெரிந்து கொண்டு நாளை இரவுக்குள் நீ வந்து சேர வேண்டும்! அங்கே யார் கேட்டா லும் நான் அனுப்பி நீ வந்திருப்பதாகச் சொல்லக்கூடாது. அவர்கள் உன்மீது சந்தேகப்படாதது மாதிரி நடந்து கொண்டு விபரங்களைத் தெரிந்து கொண்டு திரும்ப வேண்டும். .. 185