உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - .. சரி! என்று வீரமலை உறுதியுடன் சொல்லவே, களைப் பாயிருக்கிறது பயணக் களைப்பு! வீட்டுக்குப் போய் ஓய் வெடுக்கிறேன் நான் சொன்னபடி நீ உடனே புறப்படு! என்று அவனிடம் கூறிவிட்டு ராக்கியண்ணன் பாசறையிலிருந்து புறப்பட்டார். ஆசானின் ஆணைப்படி வீரமலை, சங்கரன்மலைக்கோட் டைக்குப் புறப்பட்டான். அவனுக்கு ஒரே குழப்பம்! சங்கரன் மலைக்கோட்டைக்கு ராக்கியண்ணனே அவனை ஓரிரு தடவை அழைத்துச் சென்றிருக்கிறார். அவனது தந்தை சோழன்தோட்டி மணியங்குரிச்சியெனும் ஆரிச்சம்பட்டியில் பணியாற்றிய கார ணத்தால் தாமரை நாச்சியின் அன்பைப் பெற்றிருந்ததால் அந்த சோழன்தோட்டியின் மகன் வீரமலையிடம் தாமரைக்கு ஒரு பரிவு இருக்கவே செய்தது. எனவே வீரமலை சங்கரன் மலை மாளிகைக்கு சென்று அங்கு நடப்பவைகளைத் தெரிந்து கொண்டு ராக்கியண்ணனிடம் வந்து சொல்வது அவனுக்கு எளிதான செயலேயாகும். இருந்த போதிலும் இப்போது அவனை அங்கு அனுப்பு வதில் ராக்கியண்ணனுக்கு இவ்வளவு சங்கடம் ஏற்படுவா னேன்? எதற்கும் கலங்காத அவரது முகம் கவலையால் வாடி யிருப்பானேன்? இந்த வினாக்கள் குடைந்தெடுக்க; அவற்றுக்கு விடைகாண முடியாமலே அவன் சங்கரன்மலையை நோக்கி நடந்தான். சூரிய உதயத்துக்கு முன்பே சங்கரமலையைச் சென்றடைந்த வனுக்கு வியப்பு காத்திருந்தது. கோட்டை முகப்பில் வண்ணத் தோரணங்களை அழகுறக் கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கா னோர் சுறுசுறுப்பாக இருந்தனர். வீரமலை ஒரு வீரனைப் பார்த்து என்ன விசேஷம் என்று கேட்டான். குன்றுடையாரின் குழந்தைகளுக்கு மறுநாள் இரவு பெயர் சூட்டு விழா என்று அந்த வீரன் தெரிவித்தான். அதற்கு மேல் வீரமலை அங்கு நிற்க விரும்பவில்லை. கோட்டைக்குள் போவது போலப் போக்குக் காட்டி விட்டு வேகவேகமாக மாரிக்கவுண்டன் பாளையத்துக்கு திரும்பினான். அந்தி சாய்ந்து இரண்டு நாளி கைக்கெல்லாம் பாசறைக்கு வந்தடைந்த வீரமலை, ராக்கி யண்ணனிடம்; குன்றுடையான் குழந்தைகளுக்குப் பெயர்சூட்டு விழா நடைபெறப் போவதை அறிவித்தான். பெயர் சூட்டு விழாவுக்குத் தனக்கும் அழைப்பு வந்திருக்கிற தென்று ராக்கியண்ணன் வீரமலையிடம் கூறிவிட்டு. சங்கரன் 186