உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4+ 44 கலைஞர் மு. கருணாநிதி அழகுநாச்சி! எனக்காக அல்ல; நமது பெருங்குடி மக்க ளின் எதிர் காலத்துக்காக நீயும் நானும் இந்த தியாகத்தை செய்தே ஆக வேண்டும். கோளாத்தாக் கவுண்டரால் நமது மக் களும் நாடும் எவ்வளவோ நன்மைகளைப் பெற்றதற்கு நன்றிக் கடனாக அவரது பேரக் குழந்தைகளை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். நமக்கு ஏன் இரட்டைக் குழந்தை பிறந்தது என்று அன்றைக்கு நாமே கூட அதிசயத்தில் ஆழ்ந்தோம்! ஆனால், இன்றைக்கு? அது எவ்வளவு நல்லதாகப் போயிற்று பார்த்தாயா? இதோ குன்றுடையானின் இரட்டைக் குழந்தை கள் என்று நமது குழந்தைகள் இரண்டையும் தலையூரானிடம் ஒப்படைத்து விடலாம் அல்லவா? கோளாத்தாக் கவுண்டரின் கொடி மலர்கள் இரண்டையும் கசங்கி விடாமல் காப்பாற்ற முடியும் அல்லவா?' 14 . 'அய்யோ இரட்டைக் குழந்தை நமக்குப் பிறந்ததின் வேதனை இப்போதல்லவா தெரிகிறது! ஒரே குழந்தையாகப் பிறந்திருந்தால், இப்படியொரு யோசனை உங்கள் மூளையில் துளிர் விட்டிருக்காதே!" அழகுநாச்சியார் விம்மியழத் தொடங்கினார். அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டே, அவரது கையில் இருந்த குழந்தைகளை ஆசான், தனது கையில் வாங்கிக் கொண்டார். .. -- அழகுநாச்சி! அழக்கூடாது! தாயின் வேதனையை விட இந்தத் தந்தையின் வேதனை குறைந்ததல்ல! ஆனால் நமது பெருங்குடிக் கூட்டத்து வருங்கால நல்வாழ்வுக்காக நமது குலத்தின் வீரமும் மாண்பும். விண்முட்டக் கொடி கட்டிப் பறக்கும் சிறப்பினைப் பெறுவதற்காக நாமிருவரும் இந்தத் தியாகத்தை செய்தே தீர வேண்டும். 44 - அய்யோ! ஒரு தாய் தன் குழந்தைகளை எப்படி மனம் வந்து இழப்பதற்குத் துணிய முடியும்? நீங்களே சொல்லுங் கள்!"" .. - முடியாதுதான்! ஆனால் வேறு வழியே இல்லையே! அழகு நாச்சி! இழக்கக் கூடியதை இழப்பது தியாகமில்லை சில பேர் சுயநலத்துக்காக இழக்கக் கூடியதைக் கூட இழக்கத் துணிய மாட்டார்கள்! இழக்கக் கூடாத பெரும் செல்வமாம் மக்கட் செல்வத்தை இந்த மண்ணின் எதிர்காலத்துக்காக இழக் கும் தியாகத்தைச் செய்ய இப்படி எப்போதாவதுதான் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பைத் தவற விட்டு. நாம் 197