உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - - தன்னலவாதிகளாகி விடக் கூடாது! தயவுசெய்து நான் சொல் வதைக் கேள்! இதோ கட்டிலில் கிடக்கும் கண்மணிகள் பொன் னர் சங்கர்தான் இனி நமது செல்வங்கள்! இவர்களை வளர்த்து ஆளாக்கித் தக்க சமயத்தில் குன்றுடையானிடமும் தாமரைநாச்சியிடமும் ஒப்படைப்பது நமது கடமை! அதுவரை யில் இந்தக் குழந்தைகள்தான் பொன்னர் சங்கர் என்று யாருக்குமே தெரியக் கூடாது! இந்தா; இந்தக் குழந்தைகளுக் குக் கடைசியாக முத்தம் கொடுத்து வழியனுப்பி வை !இப்படி இரண்டு குழந்தைகள் நமக்குப் பிறந்ததையே மறந்து விடுவோம் கலங்காதே! அழாதே! நீ ஒரு வீரனின் மனைவி என்பது உண்மையானால்; தாயே ஆனாலும் தன்னலமற்றவள் என்பது உண்மையானால்; நமது பெருங்குடிக் கூட்டத்தினர் நல்வாழ் வும் எதிர்கால ஒளியும்தான் நமது குறிக்கோள் என்பது உண்மை யானால்; எனக்கு விடை கொடு!" - மலைத்துப் போய் நின்ற அழகுநாச்சியார் கணவனின் கை களிலிருந்த தனது குழந்தைகளை வாங்கி, ஆசை தீர ஒன்றி ரண்டு நூறு இருநூறு ஆயிரம் லட்சமென முத்தமாரி பொழிந்தார். பின்னர் மயக்கமுற்ற நிலையில் கட்டிலின் மீது வீழ்ந்து குன்றுடையாரின் குழந்தைகளிரண்டின் பாதங்களில் தனது கண்களைப் புதைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார். தனது இரு குழந்தைகளையும் கையில் தாங்கியவாறு ஆசான்; வாசற் பக்கம் திரும்பி. "வீரமலை! நீ எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப் பது எனக்குத் தெரியும். நீ கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பலகணியைச் சிறிது திறந்தே வைத்திருந்தேன். நடந்தது அனைத்துக்கும் நீயே சாட்சி! அழகுநாச்சிக்கு சொன்னது முழு வதும் உனக்கும் பொருந்தும். என்னைப் போலவே குன்றுடை யான் குடும்பத்தின் மீது உனக்கும் விசுவாசம் உண்டு. நான் இந்தக் குழந்தைகளுடன் தலையூர் போகிறேன். நீ அழகுநாச்சி யாரை கவனித்துக் கொள்!” என்று கூறிவிட்டு வெளியே சென்றார். இந்த விபரங்களை உணர்ச்சியோடு சொல்லி முடித்த வீர மலையின் கண்கள் இப்போது அருவிகளாக இருந்தன. 198