உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஆசானின் ஆணைகேட்டே நடப்போம்” 23 . 14 அடுத்து வீரமலையின் வாயிலிருந்து என்ன வார்த்தைகள் வரப்போகின்றன எனத் தாமரையின் காதுகள், தம்மைக் கூர் மையாக்கிக் கொண்டன என்றாலும் அவற்றுக்கு முன்பே அவ ளது இதயம் படபடவெனத் துடிக்கத் தொடங்கியது. தான் பெற்ற பிள்ளைகள் உயிரோடிருக்கிறார்கள் என்பது வீரமலை சொன்ன விபரங்களில் இருந்து தெரிந்து விட்டாலும் கூட அவர்கள் எங்கேயிருக்கிறார்கள், எப்படியிருக்கிறார்கள் என் பதை உடனடியாக அறிந்து கொள்ள ஒரு தாயின் உள்ளம் அலை மோதுவது இயல்பேயல்லவா? சில நொடிகள் பொறு மையாக இருந்து முழுமையும் கேட்கலாமென்று நெஞ்சத்தை உறுதிப்படுத்திக் கொள்ள தாமரைநாச்சியார் முயன்றாள் என் றாலும், அந்த உறுதியையும் மீறிக்கொண்டு, 'நான் பெற்ற கண்மணிகள் உயிரோடு இருக்கிறார்களா?" என்று அவள் வீர மலையைப் பார்த்து அலறிவிட்டாள். குன்றுடையான் அவ ளைத் தட்டிக் கொடுத்து, "பதற்றமடையக் கூடாது தாமரை. நல்ல செய்திகளைத்தான் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்; கேட்கவும் போகிறோம்! அதற்குள் பதற்றமடைந்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே! தாமரை! இந்த நல்ல செய்திக்கி டையே ஒரு துன்பச் செய்தி கேட்டாயே? அது என்ன சாதா ரணமானதா? நம்முடைய குழந்தைகள் பொன்னர் - சங்கரைக் காப்பாற்ற அவைகளுக்குப் பதிலாகத் தனது குழந்தைகளைத் தலையூருக்கு எடுத்துக் கொண்டு போன ராக்கியண்ணனுக்கு நாம் எப்படி நன்றி சொல்லப் போகிறோம்! அவரும் அவர் மனைவியும் செய்த தியாகத்திற்கு ஈடு இணை இருக்க முடி யுமா? எனத் தழுதழுத்த குரலில் கூறினார். னால் - பெற்றோர்கள் குன்றுடையான் தாமரைநாச்சியாருக்கு முன் மாமன் சின்னமலைக்கொழுந்து அத்தை சிலம்பாயி இருவருக்கும் எதிரில் -மைத்துனன் வையம்பெருமானுக்கு அருசில் தாங்கள் இருந்தும் கூடத் தங்களை யார் என்று சொல் 199