உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் ஈட்டி கோல் வலையமும் எரி ஈட்டி நேரிசமும் கம்பு கத்தி சமுதாடு சமுக்குல பட்டாவும் தூக்கும் பரிசையோட நிலம் தூத்துவரும் சல்லிகளும் பத்துக் கட்டி போட்டடித்த பாரமான கேடயமும் எட்டுக் கட்டி போட்டடித்த ரணங்கண்ட மந்திரவாள் பதினெட்டு ஆயுதமும் அண்ணர் இருவரும் அறையிலிருந்து வெளியே வந்தனர். பாங்காகத் தானெடுத்து... களம்புகு வீரர்களாகத் தங்கள் கண்மணிகள் வந்து நிற்பது கண்டு குன்றுடையானும் தாமரைநாச்சியாரும் நெகிழ்ந்து போயினர். ஆசான் ராக்கியண்ணன் தனது மாணவர்களாக வும் மகன்களாகவும் வளர்ந்த அந்த அரிமாக்களைக் கண்டு அப்படியே மலர்ந்து போய் நின்றார். ஆசான் கால்களிலும் பெற்றோர் கால்களிலும் பொன்னர்-சங்கர் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். சின்னமலைக் கொழுந்து சிலம்பாயி இரு வரும் தங்கள் மனத்துக்குள் தெய்வத்தை வேண்டிக் கொண்டு பொன்னர் சங்கர் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினர். அப்போது அருக்காணித் தங்கம் தனது அண்ணன்மார்களின் வீரஞ்செறிந்த முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின் றாள். அவளை கவனித்து விட்ட பொன்னர் - சங்கர் அவ ளருகே சென்று அவள் தலையைக் கோதியவாறு, "என்னம்மா தங்கம்?" என்று அன்பொழுகக் கேட்டனர். - அண்ணிகள் காத்திருக்கிறார்கள் அண்ணா! அவர்களிடம் சொல்லிக் கொள்ள மறந்து விடாதீர்கள்!' என்று கண்கலங்கக் கூறினாள் அருக்காணித் தங்கம். தங்கையின் வேண்டுகோளைச் செவிமடுத்த இருவரும் தங் களின் ஆசான் முகத்தைப் பார்த்தனர். மனைவிகளிடம் போய் விடைபெறுவதென்றால் அவர்கள் உடனே விடை கொடுத்து விடமாட்டார்களே; அதனால் அது தேவையா? என்பது போல் இருந்தது அந்தப் பார்வை! ஆசானுக்கும் அது புரியாமல் இல்லை! 240 "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை" என்ற திருக்குறள் நினைவுக்கு வந்து விட்டதோ? அதாவது நீ பிரிந்து போகாதிருப்பதாயின் என்னிடம் சொல்லிக்கொள்! போய்த்தான் தீரவேண்டு மெனில் நீ திரும்பி வரும்பொழுது யார் உயிருடன் இருப்