உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி பார்களோ அவர்களிடம் சொல்லிக்கொள்! என்பது போல உங்கள் துணைவியர்கள் சொல்வார்களோ என அஞ்சுகிறீர்களா? முற்றாக நிலைமைகளை உணர்ந்துள்ள முத்தாயியும் பவளாயியும் அப்படிச் சொல்லமாட்டார் கள்!" என்று ஆசான் புன்னகை புரிந்தவாறு கூறினார். ஆசானின் உரையைக் கேட்டபிறகும் அவர்களுக்கு ஒரு தயக்கம். ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆசானை நிமிர்ந்து நோக்காமல் அவரது கால்களையே உற்று நோக்கினர். - ஓகோ பிரமச்சரியம் என்ன ஆவது என்று யோசிக் கிறீர்களா? பார்ப்பது பேசுவது இவற்றால் எந்தப் பாதக மும் இல்லை - என் சபதம் நிறைவேறும் வரையில் உட லுறவுதான் கூடாது!" என்று ஆசான் விளக்கம் தந்து, பொன்னர் கரங்களையும் பரிவுடன் பற்றிக் கொண்டு, - சங்கர் இருவரது உம்! போய் சொல்லிக்கொண்டு புறப்படுங்கள்." என்றார். அதைக் கேட்ட அருக்காணித் தங்கத்துக்கு பூரிப்பு தாங்கவில்லை. குதித்தோடிச் சென்று குப்பாயியைத் தழுவிக் கொண்டாள். பிறகு அவளை விட்டு அண்ணிகள் இருவரும் இருக்கும் அந்தப்புரம் நோக்கிப் பறந்தாள். அண்ணி! அண்ணன் வருகிறார்! அண்ணன் வருகிறார்!" என்று முத்தாயியிடமும் பவளாயியிடமும் ஓடோடிச் சென்று செய்திகளைச் சொன்னாள். அந்தப்புரக் கதவின் மீதே பார்வையைப் பதிய வைத்து நின்று கொண்டிருந்த முத்தாயியின் இதயம் படபடத்தது. தனது அருமைக் கணவன் பொன்னர் வரப்போகிறான் தன்னுடன் பேசப்போகிறான் என்பதை விட; வருபவன் திரு மணம் முடித்தவுடனேயே போர்க்களத்துக்குப் புறப்படும் செய் தியைச் சொல்வதற்காக அல்லவா வரப்போகிறான் என்பதை எண்ணிடும்போது அவளது வேதனை எல்லை கடந்தது. கத வைத் திறந்து கொண்டு பொன்னர் வந்து நின்றான். சிலிர்த்துக் கொண்டு நிற்கும் ஒரு சிங்கத்தின் செம்மார்ந்த தோற்றம். விரிந்து பரந்த மார்பில் கவசம் பூண்டு, இடுப்பில் தொங்கிய உறைவாளின் மீது ஒரு கையை வைத்தவாறு அவன் நின்ற காட்சி கண்டு முத்தாயி பெருமிதம் கொண்டாள். கட்டழகன் 241